அத்தை மகளோடு உல்லாசம்... கண்டித்த 2 வது மனைவியை கொன்ற கணவன்!!

கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக்கட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

young man killed his wife for 3rd marriage

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பேத்துப்பாறையை சேர்ந்தவர் வினோத்குமார் என்ற விவசாயிக்கும், 2013-ம் ஆண்டு கொடைக்கானலை சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணை கல்யாணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். ஒரு வருஷமாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்த வினோத் நடவடிக்கை பிடிக்காததால், விவாகரத்து ஆகியுள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு மதுரை செல்லூரை சேர்ந்த ஜெனிபருடன் கல்யாணம் நடந்தது. கொடைக்கானல் அருகே கும்பூர்வயல் என்ற இடத்தில் ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து வினோத்குமார் விவசாயம் செய்து வந்தார். இதற்காக அவர் தனது மனைவியுடன் அங்குள்ள வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டின் முற்றத்தில் ஜெனிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு வினோத்குமார் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் ஜெனிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெனிபரின் சாவில் சந்தேகம் ஏற்பட்டதால் வினோத்குமாரை பிடித்து போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில், கள்ளக்காதலியுடன் சேர்ந்து தனது மனைவியை தீர்த்துக் கட்டியது தெரியவந்துள்ளது. கொடைக்கானல் கும்பூர்வயல் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து வினோத்குமார் விவசாயம் செய்து சமயத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தை சேர்ந்த அத்தை மகள் வேளாங்கண்ணியுடன் வினோத்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வேளாங்கண்ணியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் வேளாங்கண்ணிக்கும், வினோத்குமாருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. 

இதையடுத்து இருவரும் தனியாக குடித்தனம் நடத்த முடிவு செய்தனர். அதோடு வாடகை வீடும் எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.  இவர்களின் உல்லாச மேட்டர் ஜெனிபருக்கு தெரியவரவே வினோத்குமாரை கண்டித்துள்ளார். ஆனால் வேளாங்கண்ணியுடனான பழக்கத்தை வினோத்குமார் கைவிடவில்லை. கள்ளக்காதலுக்கு ஜெனிபர் இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்து விட்டு வேளாங்கண்ணியும், வினோத்குமாரும் தனியாக குடும்பம் நடத்த திட்டமிட்டனர். 

இதற்காக வேளாங்கண்ணி நேற்று முன்தினம் மாலையில் கும்பூர்வயலுக்கு வந்தார். பின்னர் அவர், தனியாக இருந்த ஜெனிபரிடம் தகராறு செய்தார். அப்போது வினோத்குமார் ஜெனிபரின் கை,கால்களையும் பிடித்து கொண்டார். மேலும் வேளாங்கண்ணி, ஜெனிபரின் வாய், மூக்கை பொத்தியுள்ளார். இதில் மூச்சுத்திணறி வாயில் ரத்தம் வழிந்து சம்பவ இடத்திலேயே ஜெனிபர் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் இருவரும் கொலையை மறைப்பதற்காக வீட்டின் முற்றத்தில் உள்ள துணி துவைக்கும் இடத்தில் ஜெனிபரின் உடலை போட்டுவிட்டு தப்பி சென்றனர். இதையடுத்து வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெருமாள்மலை அருகே உள்ள கம்பம் நடராஜன் நகர் பகுதியில் பதுங்கி இருந்த வேளாங்கண்ணியையும் போலீசார் கைது செய்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios