ரூம் போட்டு டீச்சருடன் ஜாலியாக இருந்ததும் இல்லாமல்.. அவரை கர்ப்பமாக்கிவிட்டு.. "உன்னை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது என சொல்லிவிட்டு, அந்த டீச்சரை கத்தியால் குத்தியது மட்டுமல்லாமல், தூக்கில் பிணமாக தொங்கிய நம்பவமும் நடந்துள்ளது.

ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் அருகே ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் டீச்சர் உமா வசித்து வருகிறார்.  31 வயதான இவருக்கு அம்மா, அப்பா கிடையாது. ஆனால், ஒரு அண்ணன் மட்டும் உள்ளார். கல்யாணமும் ஆகவில்லை. அதனால், எப்ப பார்த்தாலும் செல்போன், ஃபேஸ்புக்கிலேயே பொழுதை ஓட்டி உள்ளார். அப்போதுதான் விஜய்சங்கர் என்பவர் பழக்கமாகி உள்ளார். நெல்லையை சேர்ந்த இவருடன் 6 மாதமாக ரொமான்ஸ் செய்து வந்துள்ளார். அதோடு குடும்ப  எல்லா விஷயத்தையும் அவரிடம் பேசி வந்துள்ளார் டீச்சர்.

இதனால், டீச்சர் மீது அளவுகடந்து லவ்வால் அவரை நேரில் பார்க்க ஆர்வம் ஏற்பட்டு, அடிக்கடி வேலூர் வந்து லாட்ஜில் ரூம் போட்டு தங்கி உள்ளார். அதோடு விடாமல் லாட்ஜிக்கு டீச்சரையும் வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அந்த டீச்சரும் கர்ப்பமாகிவிட்டார்.  இதனையடுத்து கல்யாணம் செய்துகொள்ள விஜய்சங்கரை வற்புறுத்த ஆரம்பிக்கவும், போன மாசம் டீச்சரின் வீட்டுக்கே வந்துவிட்டார். தன் வீட்டிலேயே விஜய்சங்கரை தங்க வைத்து கொண்டு, ஒரு வேலையும் வாங்கி கொடுத்துள்ளார் அந்த டீச்சர்.

இப்படியே ஒரே வீட்டில் நாட்கள் இருப்பதை தவிர, கல்யாணம் செய்து கொள்ளவில்லை, கல்யாணத்திற்கு விருப்பமும் இல்லயாம், அந்த டீச்சர் வீட்டிலேயே உல்லாசம் அனுபவித்து வந்துவிட்டு "உன்னையெல்லாம் கல்யாணம் செய்துக்க முடியாது" என்று நேரடியாகவே சொல்லியுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன டீச்சர் அவரை எதிர்க்க இதைப்பார்த்து  உஷாரான விஜய்சங்கர், இப்படியே விட்டால் சரியாக வராது, பேசாமல் கொன்றுவிட வேண்டும்  என்று கணக்கு போட்டு, கத்தி எடுத்து தூங்கி முகம், கழுத்து, தோள்பட்டையில் தாறுமாறாக குத்தி கிழித்துள்ளார். டீச்சருக்கு ரத்தம் கொட்டியது. ஆனாலும், ரூமில் இருந்து அலறி கொண்டே வந்து, விஜய் சங்கரை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு,. இவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இந்த மேட்டர் கேள்விப்பட்டு டீச்சரின் அண்ணனும், அந்த மருத்துவமனைக்கு இருந்து வேறு மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றபோது. அப்போது வாகன போலீசார் வழக்கம்போல் சோதனைக்காக காரை நிறுத்தவும் தான், காருக்குள் ரத்த வெள்ளத்தில் டீச்சர் இருப்பதை அறிந்து விசாரித்தனர்.

இதன்பிறகு, அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பூட்டப்பட்ட வீட்டுக்குள் இருந்து விஜய்சங்கரை மீட்டகலாம் என்று கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தால், விஜய்சங்கர் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்தார். இதையடுத்து சடலத்தை மீட்டு விசாரணை நடந்து வருகிறது.