15 வயசு சிறுமியை கடத்தி கல்யாணம் செய்து.. அந்த பொண்ணு கூட குடும்பம் நடத்தி.. 5 மாசத்தில் குழந்தையும் பெற்றிருக்கிறார் அஜித்குமாரை போலீசார்மாமியார் வீட்டில் வைத்து மசாஜ் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அஜித்குமார் பைக்குகள் சேல்ஸ் பண்ணும் வேலை பார்க்கிறார்.  இவர் கடந்த 2016-ம் வருஷம் 15 வயது சிறுமியை காதலிப்பதாக சொல்லி பழகி உள்ளார். அந்த பெண் அஜித்குமார் மீது அதிக நம்பிக்கையும் காதலுமாக இருந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக வைத்து கடத்தி கொண்டு போய்விட்டார்.

மகளை காணோம் என்று பெற்றோர் போலீசில் புகார் கொடுக்க சில வாரங்களில் மீட்டனர். ஆனால், வாழ்ந்த ருசி விடாத அஜித்குமார் திரும்பவும் அதே சிறுமியை கடத்தி சென்று கல்யாணமும் செய்து கொண்டு, குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

சில மாதங்களில் சிறுமி கர்ப்பமாகி, இப்போது 5 மாசத்தில் பெண் குழந்தை இருக்கிறது. அது மட்டுமில்லை. அந்த சிறுமியை தினந்தோறும் அடித்து கொடுமைப்படுத்தியும் வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் இதையெல்லாம் பொறுக்க முடியாத அந்த சிறுமி அங்கிருந்து தப்பி, திடீரென கைக்குழந்தையை தூக்கி கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

நடந்த விஷயங்களை அறிந்த பெற்றோர் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.