ஏற்காடு மலைப்பாதையில் கிடந்த சூட்கேஸ்; திறந்து பார்த்த போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
ஏற்காடு மலைப்பாதையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சூட்கேசில் அடைத்து வனப்பகுதியில் வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு வர வனப்பகுதியில் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு மலை பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதையில் 40 அடி பாலத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் ஒரு சூட் கேஸ் கிடப்பதாக மலைப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனகாவளர் ஏற்காடு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏற்காடு போலீசார் தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த தடயவியல் நிபுணர்கள் சூட்கேசில் ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்று சோதனை செய்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அமல அட்மின், ஏற்காடு காவல் ஆய்வாளர் செந்தில் ராஜ், மோகன் மற்றும் காவலர்கள், தடயவியல் நிபுணர்களுக்கு முன்னிலையில் சூட்கேசை திறந்து பார்த்தால் அதில் பெண்ணின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
தொடர்ந்து அந்த சடலத்தை சூட்கேசுடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சூட்கேசில் பெண்ணின் உடலை அடைத்து மலை பாதை, வனப்பகுதியில் வீசி சென்ற மர்ம யார் என்று தேடி வருகின்றனர்.