திருமண செய்து வைக்கிறேன் என வரவழைத்து மகனின் காதலிக்கு தாலி கட்டி 2 நாட்களுக்கு ரூமில் அடைத்து வைத்து கதற கதற பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்புநித்தியானந்தம் (38). அமமுக நிர்வாகியான இவர், ரெடிமேடு ஜவுளி விற்பனை கடை வைத்துள்ளார். இவரது மகன் முகேஷ்கண்ணன் (20). இவர் கல்லூரியில் படிக்கும்போது, தன்னுடன் படித்த ஒரு பெண்ணடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. தற்போது 2 பேரும் சென்னையில் பணியாற்றி வருகின்றனர். 

இதையும் படிங்க;- நானும் கருணாநிதியின் மகன் தான்... கொஞ்சம் கூட கெத்து குறையாத அஞ்சா நெஞ்சனின் அதிரடி பேச்சு... அதிர்ச்சியில் திமுக..!

இந்த காதல் விவகாரம் நித்தியானந்தத்துக்கு தெரியவந்தது. அவர், இளம்பெண்ணிடம் செல்போனில் பேசி, உன்னை எனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன். அதுபற்றி உன்னிடம் பேச வேண்டும். எனது வீட்டுக்கு தனியாக வா என்று அழைத்தார். இதையடுத்து 3 நாட்களுக்கு முன் அவரும் சென்னையில் இருந்து தனியாக கிளம்பி நித்தியானந்தம் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்ட நித்தியானந்தம், வீட்டில் இருந்த தாலியை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தில் பலவந்தமாக கட்டிவிட்டார். இதைசற்றும் எதிர்பார்க்காத அவரை மிரட்டி, 2 நாள் வீட்டிலேயே அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;- பட்டப்பகலில் நடுத்தெருவில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்... ஆடை கொடுத்து வாயடைத்துப்போன போலீஸ்..!

பின்னர் தனது நண்பர் அவுரிக்காட்டை சேர்ந்த சக்திவேல் வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று விட்டு விட்டார். இதனிடையே இந்த விவகாரம் முகேஷ்கண்ணனுக்கு தெரியவந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, அவுரிக்காடு சென்று தனது காதலியை மீட்ட பின்னர், அவர் கழுத்தில் தந்தை கட்டிய தாலியை அறுத்து எறிந்து விட்டு வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று புகார் அளித்தார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் நித்தியானந்தம், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர் சக்திவேல் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.