பொது இடங்களில் அதிமுகவினர் என்னை எங்கேயாவது பார்த்தால் நின்று பேசுகின்றனர். ஆனால், உடன் பழகிய திமுவினர் என்னை கண்டுகொள்வதில்லை. மேலும், தன்னை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றும், இந்த நிலை எப்போது மாறும் எனவும் தமக்கு தெரியும் எனவும் அழகிரி பொடி வைத்துப் பேசினார். திருமண விழாவை முடித்த மு.க.அழகிரி நேராக மதுரை விமான நிலையம் சென்று சென்னையில் உள்ள மகன் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

அதிமுகவினர் என்னை எங்கேயாவது பார்த்தால் நின்று பேசுகின்றனர். ஆனால், பழகிய திமுவினர் என்னை கண்டுகொள்வதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஒரு காலத்தில் தென் மண்டல திமுகவின் மையமாக செயல்பட்டவர் மறைந்த முன்னாள் முதல்வரின் மகனும், அஞ்ச நெஞ்சனுமான மு.க.அழகிரி. ஆனால், சில பல காரணங்களால் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனையடுத்து, திமுகவில் சேருவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தபோதும் அவரை சேர்த்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து, கருணாநிதி மறைவை அடுத்து அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை அறவே தவிர்த்த அழகிரி இந்தாண்டும் எந்த ஏற்பாடும் வேண்டாம் என மிக உறுதியாக மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனிடம் கூறிவிட்டார்.

இந்நிலையில், மதுரையில் அழகிரியின் தீவிர ஆதரவாளரும் வழக்கறிஞர் சங்கத் தலைவருமான மோகன்குமார் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில், மு.க.அழகிரியும் அவர் மனைவி காந்தி அழகிரியும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விழாவில் பேசினார். அதில், ஒருவர் மட்டுமே கருணாநிதியின் மகன் அல்ல, நானும் கருணாநிதியின் மகன் தான் என்றார். இந்த காலத்தில் நன்றி மறந்து நடந்துகொள்வது மிக எளிதாகிவிட்டது. அதற்கு நானே உதாரணம் என்றார். 