5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணவி  தினமும் கல்லூரி பஸ்சிலேயே கல்லூரிக்கு சென்று வந்தார். அப்போது ஒரு வாலிபருடன் அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த ஆத்தூர் பகுதியை சேர்ந்த  5 வாலிபர்கள், மாணவி தனது காதலனுடன் தனிமையில் இருந்த போது ரகசியமாக படம் பிடித்தனர்.

அதனை அந்த மாணவியிடம் காண்பித்த அந்த கும்பல் தங்கள், ஆசைக்கு அப்படி சம்மதிக்கவில்லையென்றால் வீட்டில் சொல்லிவிடுவதாக மிரட்டி மாணவியை பலவந்தமாக 5 பேரும் மாறி மாறி கற்பழித்துள்ளனர். அதோடு விடாமல், தொடர்ந்து  வீடியோவை காட்டி அடிக்கடி தங்களது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சம்பவம் இதுகுறித்து குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் புகார் கொடுக்க வந்தார். ஆனால் போலீசார் அதனை வாங்காமல் திருப்பி அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டு கற்பழிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவி இன்று வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அந்த மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், கல்லூரி பஸ் டிரைவர் ஒருவர் உள்பட 5 பேர் கும்பல் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அந்த கும்பல், இதேபோல 15-க்கும் மேற்பட்ட குடும்பப் பெண்களை, கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்து உல்லாசம் அனுபவித்ததாகவும், அதன் மூலம் பல லட்சம் பணம் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.