நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே வைராவிக்குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தவர் தமிழ் செல்வி(53). இவரை அம்பாசமுத்திரம் அருகே கடந்த 2008-ம் ஆண்டு 6 பேர் கொண்ட கும்பல், பலாத்காரம், கொலை செய்து அவரிடம் இருந்து நகைகளையும் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

நெல்லையில் செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே வைராவிக்குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தவர் தமிழ் செல்வி(53). இவரை அம்பாசமுத்திரம் அருகே கடந்த 2008-ம் ஆண்டு 6 பேர் கொண்ட கும்பல், பலாத்காரம், கொலை செய்து அவரிடம் இருந்து நகைகளையும் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

இது தொடர்பான வழக்கு நெல்லையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ராஜேஷ் கண்ணா மற்றும் வசந்த குமார் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக நீதிபதி இந்திராணி அறிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட எஞ்சிய 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளிகளான ராஜேஷ் கண்ணா மற்றும் வசந்த குமார் ஆகியோருக்கு தூக்கு விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.