கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலைய பெண் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் குடும்பத்தோடு வசித்துவரும், ஜெய்ஹிந்த் தேவி 
கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இவர், தனது வீட்டில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திண்டிவனம் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த திண்டிவனம் போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளனர்.