கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததால், கல்யாணமாகி மூண்டு குழந்தைகளுக்கு தாயான  பெண் போலீஸ் அதிகாரியை ஆண் போலீஸ் நடு ரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்தவர் சௌமியா மற்றும் புஷ்கரன் இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது இவரது கணவர் புஷ்கரன் அரபு நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 4.30 மணி அளவில் இவர் வேலை முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது எர்ணாகுளம் மாவட்டம் அவுலா காவல்நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றும் அஜாஸ் என்பவர் தனது காரால் சௌமியாவின் இருசக்கர வாகனத்தின்  மீது மோதியுள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சௌமியாவை காரிலிருந்து கத்தியுடன் இறங்கிய அஜாஸ் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். நிலைதடுமாறிய சௌமியா அப்போது தப்பியோட முயற்சித்த போதும் மீண்டும் விடாமல் விரட்டிச் சென்று சௌமியாவை பலமுறை கத்தியால் குத்தியுள்ளார் அஜாஸ்.

அதன் பின்னும் ஆத்திரம் அடங்காத அஜாஸ் காரில் கேனில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வந்து சௌமியாவின்  மீது ஊற்றி தீ வைத்ததாக வைத்துள்ளார். அப்போது பெட்ரோல் தன்மீதும் பெட்ரோல் லேசாக பட்டதால் அஜாஸ் மீதும் தீ பற்றியது. ஆடையில் தீப்பற்றி நிலையில் அங்கும் இங்கும் ஓடி இறுதியில் ஆடைகளை களைந்து உயிர் தப்பினார். அவரை  மடக்கிப்பிடித்த அக்கம்பக்கத்தினர் செம அடி கொடுத்து கட்டி வைத்துள்ளனர் வைத்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து படுகாயங்களுடன் இருந்த காவலர் அஜாஸை மீட்டனர்.

அவரது உடலில் தீக்காயங்கள் இருப்பதால் அவரை ஆலப்புழை மாவட்டம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே எரிந்த நிலையில் கிடந்த பெண் காவலரின் சடலத்தை மீட்டு பிரேதப பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இதனைத் தொடர்ந்து ஆலப்புழையில் பணியாற்றும் பெண் காவலருக்கும் எப்படி பழக்கம் உருவானது? இந்தக் கொலைக்கான பின்னணி என்ன? எதற்காக சௌமியாவை கொலை செய்தார்? என போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளது. மூன்று குழந்தைகளின் தாயான சௌமியாவை அஜாஸ் திருமணம் செய்ய முயன்றதாகவும். அதற்கு மறுத்ததால் இந்தக் கொலையை அவர் செய்துள்ளதாகவும் சௌமியாவின் தாய் இந்திரா கூறியுள்ளார்.

திருச்சூர் போலீஸ் பட்டாலியனில் பயிற்சியில் இருக்கும்போதே சௌமியாவுக்கும் அஜாஸுக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. 6 ஆண்டுகளாக இந்த நட்பு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் அஜாஸிடமிருந்து சௌமியா கடனாக 1.25 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த காசை திருப்பிக்கொடுத்த பிறகும் அஜாஸ் வாங்கவில்லை. எனவே, அவரது வங்கிக்கணக்கில் காசை போட்டுள்ளார் சௌமியா. அந்தப் காசை சௌமியாவின் வங்கிக் கணக்குக்கு திரும்பவும் அனுப்பியுள்ளார். அஜாஸ். இந்த நிலையில் எர்ணாகுளத்தில் உள்ள அஜாஸின் வீட்டுக்குத் தாய் இந்திராவுடன் சென்ற சௌமியா பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார். பணம் வேண்டாம் என்றும், தன்னை திருமணம் செய்துகொள்ளும் படியும் வற்புறுத்தியதாக சௌமியாவின் தாய்  தெரிவித்தார்.

சௌமியாவுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கடைசி மகளுக்கு இரண்டரை வயது ஆகிறது.  மூத்த மகன் ருஷிகேஷ் போலீஸிடம் கூறுகையில்; அஜாஸிடமிருந்து தொடர்ந்து மிரட்டல் வருவதாக அம்மா சொன்னார். என்மீது தாக்குதல் நடந்தாலோ, நான் கொல்லப்பட்டாலோ இதைப் போலீஸில் கூற வேண்டும் என அம்மா சொல்லியிருந்தார் என அழுதுகொண்டே கூறியுள்ளான்.