- Home
- குற்றம்
- உடற்கல்வி ஆசிரியருடன் சௌமியா.! வீட்டிற்கு வந்தும் எந்நேரமும் ஓயாமல்! விஷயம் தெரிந்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
உடற்கல்வி ஆசிரியருடன் சௌமியா.! வீட்டிற்கு வந்தும் எந்நேரமும் ஓயாமல்! விஷயம் தெரிந்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக, சௌமியா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் ரமேஷை கொலை செய்துள்ளார். மாரடைப்பு என நாடகமாடிய நிலையில், இறந்தவரின் புகைப்படத்தில் இருந்த கழுத்து காயம் சந்தேகத்தை ஏற்படுத்த, போலீஸ் விசாரணையில் கொலை அம்பலமானது.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (35). தனியார் நிறுவன வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சௌமியா (30). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் அலுவல ஊழியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சௌமியாவுக்கும், அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் திலீப் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பணி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும் சௌமியா, திலீப்புடன் போனில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் ரமேஷ்க்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே கணவர் ரமேஷ் ரூ.2 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்திருப்பது சௌமியாவுக்கு தெரியவந்தது.
இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை போட்டு தள்ளிவிட்டு அந்த 2 கோடி ரூபாய் பணத்தை ஆட்டையை போட மனைவி மற்றும் கள்ளக்காதலனும் திட்டமிட்டார். இதற்கு உடந்தையாக திலீப்பின் தம்பி அபிஷேக் உடந்தையாக இருந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் ரமேஷ் சென்ற பைக் மீது காரை மோதியுள்ளனர். இதில் ரமேசுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து ரவுடி கும்பலின் தலைவன் உதவியை நாடியுள்ளனர்.
அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி இரவு ரமேஷூக்கு அதிகளவு தூக்க மாத்திரையை தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார். இதனால் ரமேஷ் ஆழ்ந்து தூங்கினார். இதனையடுத்து சௌமியா தனது கள்ளக்காதலன் திலீப் ரவுடி கும்பலை வரவழைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். மறுநாள் காலையில் தனது கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக நாடகமாடியுள்ளார். இதனிடையே வெளிநாட்டில் இருக்கும் ரமேஷின் தம்பி கோதாரி, அண்ணனின் இறுதிசடங்குக்கு வரமுடியாத நிலையில் அவருக்கு செல்போனில் இறப்பு, இறுதிச்சடங்கு போட்டோக்கள் அனுப்பியுள்ளார். அப்போது அவரது கழுத்தில் காயம் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கோதாரி தனது அண்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவிக்கு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சௌமியாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றதை சௌமியா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சௌமியா, அவரது கள்ளக்காதலன் திலீப் உள்ளிட்ட6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

