- Home
- Tamil Nadu News
- இரண்டு குழந்தைகளின் தந்தையுடன் 22 வயது மருத்துவ மாணவி காதல்.. அப்பார்ட்மென்ட்டில் வர்ஷினி இருந்த கோலம்.!
இரண்டு குழந்தைகளின் தந்தையுடன் 22 வயது மருத்துவ மாணவி காதல்.. அப்பார்ட்மென்ட்டில் வர்ஷினி இருந்த கோலம்.!
சேலத்தில் ஹோமியோபதி கல்லூரி மாணவி வர்ஷினி தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்த நிலையில், திருமணமானவருடனான காதலை எதிர்த்த தந்தையே கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்த வரதராஜன். இவரின் மகள் வர்ஷினி (22). இவர் சேலத்தில் உள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி அருகேயுள்ள நல்லாம்பட்டி நாயக்கன்பட்டியில் லட்சுமணன் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தோழியுடன் அறை எடுத்து தங்கியிருந்தார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு சென்ற வர்ஷினி கடந்த 4 நாட்களுக்கு முன்பு சேலம் வந்த நிலையில் அறையில் தங்கியிருந்தார். அவரது தோழி அட்சயா ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் அறைக்கு திருப்பியுள்ளார். அப்போது படுக்கையிலேயே வர்ஷினி உயிரிழந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தோழிகள் அலறி கூச்சலிட்டனர்.
இதுதொடர்பாக இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வர்ஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வர்ஷினியின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. 22 வயதான வர்ஷினி நெல்லை சேர்ந்த 40 வயதான 2 குழந்தைகளின் தந்தையான ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் வர்ஷியின் தந்தைக்கு தெரியவந்ததை அடுத்து கண்டித்துள்ளார். இதனால் வீட்டில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆனாலும் காதலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வரதராஜன் மகளை பார்க்க வந்துள்ளார். அவர் இரவு சுமார் 8.30 மணியளவில் வீட்டை விட்டு கிளம்பி போன பிறகுதான் இந்த கொலை நடந்திருக்கும். மேலும் மகளின் காதலை ஏற்றுக்கொள்ளாத அவர் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
அவரது உடல் அருகே தலையணை கிடந்தது. எனவே காதலை கைவிடுமாறு தந்தை வற்புறுத்தி கூறியும் அவர் கேட்காத நிலையில் தலையணையை முகத்தில் போட்டு அழுத்தி கொன்றிருக்கலாம் யுகிக்கப்பட்டது. அதற்கேற்றார் போல வரதராஜன் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மாணவியின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது ஒரு கையில் புளூகலர் இருப்பதால் உடலில் விஷம் இருக்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தந்தையே மகளை ஆவணக் கொலை செய்தாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே முழு விவரம் தெரியவரும்.

