தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவருக்கு திருமணமாகி மனைவியும், 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், அந்த சிறுவனின் தந்தைக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவருடன் வசித்து வந்த 47 வயதுடைய ஒரு பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.  இதனால், வீட்டில் கணவன், மனைவி இருவருக்கும் தகராறு நிலவி வந்தது. 

தந்தையின் கள்ளக்காதலியை நண்பருடன் சேர்ந்து மகன் கட்டிடையால் அடித்து கொன்ற சம்பவம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவருக்கு திருமணமாகி மனைவியும், 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், அந்த சிறுவனின் தந்தைக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவருடன் வசித்து வந்த 47 வயதுடைய ஒரு பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால், வீட்டில் கணவன், மனைவி இருவருக்கும் தகராறு நிலவி வந்தது. 

இதனையடுத்து, தந்தையின் கள்ளக்காதலி மீது சிறுவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று தனது நண்பருடன் தந்தையின் கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று அந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில், வாக்குவாதம் முற்றியதால் அருகில் இருந்த உருக்கட்டையை எடுத்து தந்தையின் கள்ளக்காதலி தலையில் சரமாரியாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் கூச்சலிட்ட படியே சரிந்தார். பின்னர், சிறுவனும் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர். 

இதனையடுத்து, அப்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.