திருப்போரூர் அருகே தலையில் கல்லைபோட்டு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருப்போரூர் அருகே தலையில் கல்லைபோட்டு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த வெண்பேடு மேட்டுத் தெருவில் வசித்து வந்தவர் கெங்கம்மாள் (70). இவருக்கு சங்கர், டில்லி என்ற 2 மகன்களும், 2 மகள்களும் இருந்தனர். மகன் டில்லி ஏற்கனவே இறந்து விட்டதால் அவருடைய மனைவியும், மருமகளான பார்வதியுடன் கெங்கம்மாளை வசித்து வந்தார். அவருக்கு மற்றொரு மகனான சங்கருடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்தார். 

நேற்று காலை கெங்கம்மாள் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கெங்கம்மாள் அப்பகுதியில் உள்ள மலைப்பகுதியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சனையில் கெங்கம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.