மொராக்கோவை சேர்ந்த 30 வயது பெண், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாக  ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே  பிரிந்து வாழ்ந்துள்ளார்.

இந்த காரணத்தால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரை கொலை செய்து உடலை துண்டு போட்டு அரிசி, கறியுடன் சேர்த்து பிரியாணி சமைத்து  வீடுகட்டும் தொழிலாளிகளுக்கும்  பாகிஸ்தானியர்களுக்கும் விருந்தாக கொடுத்துவிட்டார். தாங்கள் சாப்பிடுவது மனித கறி என்று தெரியாமல் அவர்களும் சாப்பிட்டுள்ளனர். மீதமுள்ள கறியை அவர் நாய்க்கு போட்டுள்ளார். 

இந்த கொடூர சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆன நிலையில், இந்த விஷயம் தற்போது தான் தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட நபரை தேடிக் கொண்டு அந்த நபரின் சகோதரர் காதலி  வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சமையல் அறையில் இருந்த பாத்திரம் ஒன்றில் மனித பல் இருப்பதை பார்த்து சந்தேகம் ஏற்பட்டு அவர் போலீசில் புகார் அளித்தார்.

சந்தேகப்பட்டு போலீசார் வந்து விசாரித்தபோது தான் தனது முன்னாள் காதலரை பழி வாங்க அவரை கொலை செய்ததை அந்த பெண் ஒப்புக் கொண்டார். அந்த பெண்ணும், கொலை செய்யப்பட்ட நபரும் 7 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் அந்த நபர் மொராக்கோவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.