கணவன் செல்போன் வாங்கி தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை
சென்னை திருப்பெரும்புதூர் அருகே கணவர் செல்போன் வாங்கித் தராததால் மன உளைச்சலில் இருந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த படப்பை பெரியார் காலணியில் வசித்து வருபவர் முருகன். முருகன் மரவேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஐந்து வயது ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சரஸ்வதி தன் கணவரிடம் தொடர்ந்து செல்போன் வாங்கி தரச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
கணவர் செல்போன் வாங்கி தர மறுத்து தகாத வார்த்தையில் திட்டி விட்டு வீட்டை விட்டு வெளியேறி சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது படுக்கை அறை உள்ளே பூட்டப்பட்டு இருந்துள்ளது. கதவை வேகமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த முருகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது சரஸ்வதி மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
விமானப்படை தினத்தை முன்னிட்டு தாம்பரம் விமானப்படை தளத்தில் வீரர்கள் சாகசம்
உடனே அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சரஸ்வதி இறந்து விட்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்து சென்ற மணிமங்கலம் காவல்துறையினர் பிரதேசத்தை கைப்பற்றி இச்சம்பம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் கணவரிடம் செல்போன் கேட்டு வாங்கி தர மறுத்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் உறவினர்களிடத்திலும், அப்பகுதி மக்களிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் 3 குழந்தைகள் உயிரிழந்த காப்பகத்திற்கு பூட்டு போட்ட அதிகாரிகள்