4 பேரை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களை அழகில் மயக்கி உல்லாச வாழ்க்கை அனுபவித்துவிட்டுமோசடி செய்த இளம் பெண் சிக்கியுள்ளார்.

ஐதராபாத்தை சேர்ந்த நரசிம்மா வேணுகோபால், தனது வயதான தாய்-தந்தையை கவனித்துக் கொள்ளும் பெண் தேவை என்று திருமண தகவல் மைய வெப்சைட்டில் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்து கடந்த ஆண்டு ரீனா என்ற பெண் அறிமுகமானார்.

பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ள ரீனா, நரசிம்மாவிடம், உங்களது பெற்றோரை நான் நன்றாக பார்த்து கொள்வேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய நரசிம்மா திருமணத்துக்கு சம்மதித்தார். பெற்றோர்கள் ஆசிர்வாதத்தில் நரசிம்மா வேணுகோபால் - ரீனா கல்யாணம் நடைபெற்றது.

கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் குடும்பம் நடத்திய ரீனா, கணவர் செய்து போட்ட நகைகளை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமலேயே ஓடிவிட்டார். அருணா விட்டுச் சென்ற பெட்டியை நரசிம்மா திறந்து பார்த்தார். அப்போதுதான் ரீனா உடனான கல்யாணத்திற்கு முந்தைய உல்லாச வாழ்க்கை ரகசியங்கள் அதில் இருந்தது தெரியவந்தது. ரீனா மேலும் 3 பேரை கல்யாணம் செய்திருப்பதற்கான போட்டோ ஆதாரங்கள் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நரசிம்மா ஐதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரீனாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், பணத்துக்காகவும், உல்லாசத்துக்காகவும் கல்யாண மோசடி பெண் என்பது அம்பலமானது.

முதலாவதாக ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரை கல்யாணம் செய்து கொண்டு ரீனா, ரூ.15 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார். 4 வருஷ திருமண வாழ்க்கை கசந்ததால் வாரங்கலை சேர்ந்த ஹரீஷ் என்பவரை கல்யாணம் செய்து கொண்டு ரூ.20 லட்சம் ஏமாற்றி 2 மாதங்களில் சண்டை போட்டு பிரிந்துள்ளார்.

இதையடுத்து அமெரிக்காவில் வசித்து வரும் பவன் என்பவரை கல்யாணம் செய்து ரூ.50 லட்சம் வரை ஆட்டையை போட்டது தெரியவந்துள்ளது. இந்த மோசடிப் பெண் ரீனா, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இதுபோன்று செயல்பட்டுள்ளார். கல்யாண தகவல் மையத்தில் இணைய தளத்தில் பதிவு செய்து விட்டு காத்திருக்கும் நபர்களில் 2-வது திருமணம் செய்ய நினைப்பவர், வழுக்கை தலையுடன் காணப்படுபவர் போன்றவர்களையே ரீனா குறி வைத்துள்ளார். தனது கவர்ச்சி உடலால் அவர்களை திருமண வலையில் வீழ்த்தியுள்ளார்.

திருமணம் செய்து கொண்டு சில வருடம் உல்லாசமாக இருந்துவிட்டு, தனது அழகில் மயங்கிய அவர்களிடம் போதிய பணத்தை அபேஸ் செய்துவிட்டு,  ஏமாற்றி கல்யாணம் செய்து கொண்ட ரீனா மேலும் 5 வாலிபர்களுக்கும் கல்யாண ஆசை காட்டி வலைவிரித்ததும் தெரிய வந்துள்ளது. அதற்கு முன்னதாக அவர் போலீசில் சிக்கிக் கொண்டார், கைதான ரீனா ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார்.