காதலித்த பெண் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரம்... பெண்ணின் உறவினர்கள் 11 பேரை வெட்டி கொடூரம்.
காதலித்து வந்த பெண் திடீரென திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் அந்தப் பெண் உட்பட அவரின் உறவினர்கள் 11 பேரை காதலன் சரமாரியாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காதலித்து வந்த பெண் திடீரென திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் அந்தப் பெண் உட்பட அவரின் உறவினர்கள் 11 பேரை காதலன் சரமாரியாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காதல் என்ற பெயரில் பரவலாக வன்முறை அதிகரித்து வருகிறது. காதலிப்பதாக கூறி இளம் பெண்களை கற்பழித்து மோசடி செய்வது, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, காதலித்து திருமணம் செய்து கொண்டு வரதச்சனை கேட்டு கொடுமை செய்வது என எண்ணற்ற கொடுமைகளைப் பெண்கள் அனுபவிக்கின்றனர். இது போன்ற குற்றங்களை தடுக்க காவல்துறை எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, இந்த வரிசையில் காதலித்து வந்த பெண் திடீரென திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் அந்தப் பெண் உட்பட அவர்களின் உறவினர்களை காதலன் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இந்த கொடூரம் அரங்கேறியது. முழு விவரம் பின்வருமாறு:-
இதையும் படியுங்கள்: குடிபோதையில் வீடு தேடிவந்த மாமியாரின் கள்ளக் காதலன்.. கட்டிப் போட்டு அடித்த மருமகள்.. துடி துடித்து உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ஃபிரங்கிபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த பிரகாசம் பந்துலு தெருவைச் சார்ந்த மணிகண்டன் (23) என்ற இளைஞர் காதலித்து வந்தார். அந்தப் பெண்ணும் மணிகண்டனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் திடீரென அந்தப் பெண்ணுக்கு மற்றொரு இடத்தில் வரன் பார்க்கப்பட்டது, அப்போது அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பெண்ணை காதலித்து வந்த மணிகண்டன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.
இதையும் படியுங்கள்: தலையில் ஒரே போடு! 18 வெட்டுகள்! 5 வருட காதலியை துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் கொன்ற காதலன்!என்ன காரணம் தெரியுமா?
ஆனால் மணிகண்டனை திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என கூறினார். ஆனாலும் இந்த விவகாரத்தில் இரண்டு குடும்பத்தினரையும் அழைத்து பேசி பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம் என மணிகண்டன் பெண்ணின் குடும்பத்தினரிடம் கூறினார். இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர்களும் மணிகண்டனின் குடும்பத்தாரும் சமாதானம் பேசினர். அப்போது மணிகண்டன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது, அப்போது மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கினர்.
இதில் 2 இளம் பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். அதில் ஒன்பது பேர் நரசராவ் பேட்டை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலத்த காயம் அடைந்த அந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் குண்டூர் ஜிஎச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பெண்ணின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய காதலன் மணிகண்டன் தலைமறைவாகியுள்ளார். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் அடையாளம் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குண்டூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.