Illegal Affair : ஏன் கள்ளக் காதல் ஏற்படுகிறது? ஆய்வு சொல்லும் 5 உண்மைகள்..!!
திருமணத்தை மீறி அரங்கேறும் கள்ளக் காதல் தொடர்பான செய்திகளை நாம் தினசரி கடந்து வருகிறோம். நமக்கு தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது நெருக்கமான வட்டாரத்திற்குள் கூட கள்ளக் காதல் ஏற்படுவதை பலரும் பார்க்கிறோம். ஆரம்பத்தில் விளையாட்டாக தெரியும் இந்த உறவு, நாளிடைவில் மிகவும் சீரியஸாகும் போது பிரச்னையும் பெரிதாகி விடுகிறது. காதலைப் போலவே, கள்ளக்காதலும் ஆரம்பத்தில் கன்னாபின்னா என்று தான் இருக்கும். ஆனால் பின்நாட்களில் அது ஏற்படுத்தும் அபாயம் அதிகம். கள்ளக்காதல் மோசமானதாக இருந்தாலும், ஒவ்வொரு திருமணத்தை மீறிய உறவுக்கும் பல காரணங்களும் நோக்கங்களும் உள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
அரவணைப்பு தேவை
திருமணமாகி இருந்தாலும், வாழ்க்கைத் துணை இருந்தாலும் ஒருசிலருக்கு தொடர்ந்து காதலில் இருப்பது தேவையானதாக இருக்கும். அதற்கு துணை மீது ஈடுபாடு இல்லாமல் இருப்பதே முக்கியமான காரணமாகும். இதுபோன்ற திருமண உறவில் இருப்பவர்கள் தொடர்ந்து காதலை தேடிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக இவர்கள் ஒருவரை காதலிப்பார்கள் அல்லது திருமணத்தை மீறிய உறவில் இருப்பார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. அது ஒரு உணர்வு சார்ந்த நிலையாகவே இருக்கும். பாலியல் தேவைகள் இரண்டாம் பட்சம் தான்.
காதலால் கசிந்து உருகும் உறவு
உங்களுடைய துணையை மீறி வேறொரு நபருடன் ஈர்ப்பு ஏற்பட்டால், அது காதலுக்கு அடுத்த நிலையை அடைந்து விடுகிறது. அந்த ஈர்ப்பு தீவிரமாகி, குறிப்பிட்ட நபரை காதலிப்பதாகவும், அவரில்லாமல் உங்களால் வாழ முடியாது என்கிற எண்ணம் உங்களுக்கு வரக்கூடும். அதை நீங்கள் நம்பத் தொடங்கிவிட்டால், அது கள்ள உறவாக மாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனினும் ஒருசிலர் அதை வெறும் ரொமேன்ஸ் சார்ந்த உணர்வுகளுடன் கடந்து சென்றுவிடுகின்றனர் என்பதே நிதர்சனம்.
ஒரு இரவு நேரத்து மயக்கம்
உணர்வு சார்ந்த விஷயங்களில் விபத்து என்பது எதுவுமே இல்லை. நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் எதுவுமே தற்செயலானது கிடையாது. ஒன்று உங்களுடைய விருப்பத்தின் படி நிகழ்வுகள் அரங்கேறும் அல்லது, மற்றவர் விரும்பியபடி நிகழ்ச்சிகள் நடக்கும். அப்படி தான் ஒருநாள் இரவு ஏற்படும் மயக்கமும் கூட. இப்படிப்பட்ட உறவுகளில், சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேருக்கும் எந்தவிதமான உணர்வுகளும் இருக்காது. வெறும் பாலியல் வேட்கை மட்டுமே அடங்கி இருக்கும். ஆனால் ஒருநாள் இரவு விஷயத்தில் இருக்கும் பெரிய பிரச்னை, அந்த கள்ள உறவு தொடர்ந்து நீடிக்கும் என்பது தான்.
உங்கள் கணவரிடம் ‘அந்த’ படம் பார்க்கும் பிரச்னையுள்ளதா..?? அப்போ இதப்படிங்க..!!
உணர்வு பரிமாற்றம் மட்டுமே
இயல்பாக ஒருவர் மீது நமக்கு பிணைப்பு ஏற்படும். அது நட்பாக வளர்ந்து, பிறகு காதலாக மாறக்கூடும். குறிப்பிட்ட நபருடன் நாம் அதிகம் நேரம் செலவிடுவதால் ஏற்படும் விளைவு தான் அந்த உறவு. அந்த நபர் திடீரெனெ ஏற்பட்ட நட்பாக இருக்கலாம், சக ஊழியராக இருக்கலாம், திடீரென சந்தித்தவராக இருக்கலாம். குறிப்பிட்ட இந்த உறவுகள் பாலியல் உணர்வுடனும் இருக்கலாம் அல்லது அது இல்லாமலும் இருக்கலாம். எனினும் அந்த இருவருக்குமிடையேயான நட்பு அல்லது காதல் அல்லது உறவு மிகவ்ம் உணர்வு ரீதியிலான பிணைப்பாகவே இருக்கும்.
முகப்பருக்கள் எங்கு வந்தால் என்ன உடல்நல பிரச்னை?- தெரிஞ்சுக்கோங்க..!!
துணையை பழி தீர்க்கும் கள்ள உறவு
ஒருவருக்கு தனது துணையை பிடிக்கவில்லை என்றாலோ அல்லது தனது திருமண வாழ்வில் பெரும் ஈடுபாடுல்லாமல் இருந்தாலோ, அவர்கள் தங்களுடைய துணையை பழிவாங்க முனைவார்கள். அலுவலக நண்பர்கள், நெருங்கிய நட்பு வட்டங்கள் அல்லது ஆன்லைன் மூலம் பழக்கமானவர்களுடன் நெருங்கி பழகுவார்கள். இதன்மூலம் தான் கள்ள உறவில் இருப்பதாக வெளியுலகுக்கும், தனது துணையிடம் வெளிப்படுத்திக் கொள்வார்கள். இது ஆபத்தை ஏற்படுத்தும். தனது மனைவி அல்லது கணவன் கள்ள உறவில் இருப்பதை துணைக்கு தெரியவந்தால், அவர்களும் கள்ள உறவில் இருந்து பழிக்கு பழி தீர்க்க முயலுவார்கள்.