முகப்பருக்கள் எங்கு வந்தால் என்ன உடல்நல பிரச்னை?- தெரிஞ்சுக்கோங்க..!!
உண்ணும் உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால், அதனால் உடலில் நஞ்சு அதிகரிக்கும். அதனால் நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவு சரியாக செரிமானாக வேண்டியது முக்கியம். ஒருவேளை உணவு செரிமானமாவதில் ஏதாவது பிரச்னை இருந்தால், நெற்றியில் பருக்கள் தோன்றும். இதனால் முகத்தின் அழகு பாதிக்கப்படும். ஒரு சிறு பரு வந்தாலும் போதும், பெண்களுக்கு கவலை ஏற்பட்டுவிடும். உள்ளே இருக்கும் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை வெளிக்காட்டுவது தான் பரு. மருந்துகளை சாப்பிடுவதன் காரணமாகவோ, முகத்தில் பல்வேறு க்ரீம்களை பூசுவதன் காரணமாகவோ பருக்கள் நிரந்தரமாக போய்விடாது. உரிய மருத்துவரை அணுகி, தகுந்த வழிமுறைகளை கடைப்பிடித்தால் பரு வருவதை நிரந்தரமாக தடுக்கலாம்.
நெற்றியில் ஏற்படும் பருக்கள்
இரண்டு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் இடத்தில் பருக்கள் வந்தால், கல்லீரலில் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதுனாலும் மது அதிகமாக குடிப்பதன் காரணமாகவும் அந்த இடத்தில் பரு தோன்றும். உணவினால் ஏதாவது ஒவ்வாமை ஏற்பட்டாலும் இரண்டு புருவங்களுக்கு இடையில் பருக்கள் தோன்றும். பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிட்டு வருவதன் மூலமாக, அது ஏற்படாமல் தடுக்கலாம்.
மேல் நெற்றியில் ஏற்படும் பருக்கள்
உணவுகளை சரியாக மென்று சாப்பிடாமல் இருந்தால், அதிலுள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. இதன்காரணமாக மேல் நெற்றிப் பகுதியில் பரு தோன்றும். ஒருவேளை உங்களுக்கு இந்த பிரச்னையிருந்தால், ஆண்டிஆக்சிண்ட் அதிகமாக கொண்ட காய்கறிகளை அதிகளவில் சாப்பிடுங்கள். மேலும் உங்களுடைய உணவில் மஞ்சள் இருப்பது போல பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட இந்த உணவு முறையில் காபி மற்றும் குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.
நெருங்கிய நண்பருடன் தனிமையில் இருக்க விரும்புகிறீர்களா? இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்..!!
புருவங்களுக்கு மேலே வரும் பருக்கள்
முகத்தில் புருவங்களுக்கு மேலே பருக்கள் வந்தால், உடலுக்கு தேவையான அளவு தூக்கம் கிடைக்கவில்லை என்று அர்த்தம். மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு பிரச்னை கொண்டவர்களுக்கு இந்த பாதிப்பு இருக்கும். சீரான ரத்தம் ஓட்டம் இல்லாவிட்டாலும் இப்பாதிப்பு வரும். தொடர்ந்து உடல் உழைப்பு இருந்து வருவதும் உடற்பயிற்சி செய்வதன் காரணமாகவும் நல்ல தூக்கம் வரும். தினமும் 7 முதல் 8 மணி வரை தூங்குவது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.
காதுகளில் தோன்றும் பருக்கள்
உடலில் உப்பின் அளவு அதிகமாகும் போது காதுகளிலும் பருக்கள் தோன்றும். மேலும் உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் இந்த அறிகுறி தோன்றும். அதனால் எப்போதும் உப்பை அளவுடன் சாப்பிடுங்கள். அதிகளவு தண்ணீர் குடியுங்கள். பழச்சாறு, மோர் போன்றவை காதுகளில் தோன்றும் பருக்களை குறைக்கும். அதேபோல காஃபியை குடிப்பதை குறைத்துக் கொள்வதாலும் காதுகளில் பருக்கள் தோன்றாது.
இந்த 5 பொருட்கள் இருந்தால் போதும்- எப்படிப்பட்ட வயிற்றுப் பிரச்னையையும் சமாளித்து விடலாம்..!!
கன்னங்கள் ஏற்படும் பருக்கள்
நம்மில் பலருக்கும் கன்னங்களில் தான் பருக்கள் அதிகமாக தோன்றும். இதற்கு காரணம் குடலில் ஏற்படும் பாதிப்புகள் தான். அதேபோன்று அதிகமாக புகைப் பிடிப்பதாலும், மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதாலும் கன்னத்தில் பருக்கள் வருகிறது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை தலையணையை துவைத்து பயன்படுத்து வருவது, அதிகளவில் தண்ணீர் குடிப்பது, வெளியில் செல்கையில் முகத்தை மறைத்துக் கொண்டு செல்வது போன்றவை முகத்தில் பருக்கள் தோன்றுவதை தடுக்கும்.