கணவரை தாக்கி அவரது கண் முன்னே இளம்பெண்ணை துப்பாக்கியால் மிரட்டி 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

உ.பி., மாநிலம் அம்ரோதா மாவட்டத்தில் வசிக்கும் 25 வயதான இளம்பெண் மருத்துவமனைக்கு தனது கணவடுடன் சென்று விட்டு வீடு
திரும்பியுள்ளார். ரிக்‌ஷாவில் திரும்பிக் கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் அந்த ரிக்க்ஷாவை வழி மறித்து இளம்பெண்ணின் கணவரை தாக்கி மிரட்டினர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அந்தக்கும்பல் அந்தப்பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று சில்மிஷத்தில்
ஈடுபட்டனர். 

அப்போது அந்தப்பெண் கதறித் துடித்தார். கண்முன்னே மனைவிக்கு நடக்கும் அக்கிரமத்தைக் கண்டு பொங்கி எழுந்த இதனால் அதிர்ச்சி
அடைந்த பெண் கதறினார். அவரது கணவர் கும்பலை தடுக்க முயன்றார். ஆவேசமடைந்த அந்தக் கும்பல் அவரை ஆயுதங்களால்
தாக்கி, துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதன் பிறகு அந்த கும்பல் கணவர்
கண் முண்ணே துப்பாக்கி முனையில் மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்தனர். 

இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த உஸ்மான், இமாமுதீன், ரஷீத் மற்றும் ரியாசுப் ஆகிய 4 பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இவர்களில் இருவரை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு உ.பி., மாநிலம் புலந்த்ஸ்கர் பகுயிலும் இதே போல 31 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் சென்ற போது 4 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.