மதுரையில் பள்ளியில் ஆசிரியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ரதிதேவியை கொலை செய்த கணவர் குருமுனீஸ்வரன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.


மதுரையில் பள்ளியில் ஆசிரியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ரதிதேவியை கொலை செய்த கணவர் குருமுனீஸ்வரன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் ஆசிரியையாக ரதிதேவி பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் அவரது கணவர் குருமுனீஸ்வரன் என்பவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடமாக பிரிந்து வாழ்த்து வருகின்றனர். 

இந்நிலையில், இன்று வழக்கம்போல பள்ளிக்கு வந்து ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வகுப்பறைக்குள் நுழைந்த கணவர் குருமுனீஸ்வரன் அவரிடம் வாக்குவாதம் செய்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரதிதேவியை கண்மூடித்தனமாக குத்தினார். இதில், ஆசிரியை ரதிதேவி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனை கண்ட மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு பள்ளியை வீட்டு வெளியேறினர். கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரதிதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை தேடிவந்தனர். இந்நிலையில், மனைவியை கொன்ற கணவர் குருமுனீஸ்வரன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். பள்ளி வகுப்பறையில் நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.