அப்போது சதீஷ் மற்றும் தனலட்சுமி வீட்டில் ஒன்றாக இருந்ததை பார்த்த விக்னேஷ், ஆத்திரத்தில் தனலட்சுமியின் வீட்டிலே வைத்து சதீஷை கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தகாத உறவு காரணமாக இளைஞர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியான விக்னேஷ் குமார் என்பவரை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாராயணபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்குமார்(26) இவருடைய மனைவி தனலட்சுமி(26) இருவருக்கும் திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் விக்னேஷ்குமார் சிவகாசியிலும், அவரது மனைவி தனலட்சுமி சாத்தூர் அருகே படந்தாலிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனலட்சுமிக்கும், அதே பகுதியில் வசிக்கும் சதிஷ்(25) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது தகாத உறவாக மாறியது. இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவில் விக்னேஷ்குமார் திடீரென படந்தாலில் உள்ள தனலட்சுமியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சதீஷ் மற்றும் தனலட்சுமி வீட்டில் ஒன்றாக இருந்ததை பார்த்த விக்னேஷ், ஆத்திரத்தில் தனலட்சுமியின் வீட்டிலே வைத்து சதீஷை கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். அதில் பலத்த காயமடைந்த சதீஷை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனலட்சுமியின் உறவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சதீஷ்குமார் உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்த சாத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, தனலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சிவகாசியில் இருந்த சதீஷின் உடலை கைபற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தனலட்சுமியை சாத்தூர் நகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது கணவர் விக்னேஷ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.