மனைவியின் கள்ளக்காதலனை, சரக்கு அடிக்கலாம் என ஏமாற்றி வர வைத்து கொடூரமாக போதையில், துடிக்க துடிக்க கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்லுப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மனைவி முத்துலட்சுமி. இருவரும் ஒன்றாகவே கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர். கருப்பண்ண மனைவி முத்துலட்சுமிக்கும், அருப்புக்கோட்டை பாலையம்பட்டி சேர்ந்த காளிமுத்து என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்ததால் முத்துலட்சுமியின் கணவர் கருப்பண்ணனுக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை, 

கணவன் மனைவி மீது வைத்திருந்த நம்பிக்கையை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். ஆனால், இதை சாதகமாக தனக்கு பயன்படுத்திக் கொண்ட முத்துலட்சுமி, காளிமுத்து உடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விஷயம் கணவனுக்கு தெரிந்ததும் பெரிதாக பொருட்படுத்தவில்லை, இதனால் நொந்து போன கணவன் மனைவியின் கள்ளக் காதலனான காளிமுத்துவை கொலை செய்ய பிளான் போட்டுள்ளார்.

 இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவியின் கள்ளக்காதலன் காளிமுத்துவுக்கு, போன் பண்ண கருப்பண்ணன் எங்க வீட்டில் கோழிக்கறி செய்துள்ளோம், வா நாம சரக்கு அடிக்கலாம் என ஏமாற்றி வரவழைத்துள்ளார்.

கருப்பண்ணன் சொன்னதைக்கேட்டு காளிமுத்துவும் வந்துள்ளார். அப்போது, இருவரும் பேசிக்கொண்டே சரக்கு அடித்துள்ளனர். நேரம் நள்ளிரவைத் தொட்டது,  அந்த சமயத்தில் இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த கருப்பண்ணன் மனைவியின் கள்ளக்காதலன்  காளிமுத்துவை பக்கத்தில் இருந்த மண்வெட்டியை எடுத்து வெட்டியுள்ளார்.

அப்போது மனைவி முத்துலட்சுமி தடுக்க முயன்ற போது அவரையும் வெட்ட துரத்தியுள்ளார். பயந்து ஓடிய முத்துலட்சுமி பதுங்கிக் கொண்டார். இந்த சமயத்தில் உயிர் தப்பி அங்கிருந்து ஓட முயற்சித்த காளிமுத்து அளவுக்கதிகமாக சரக்கு அடித்திருந்ததால் அவரால் ஓட முடியவில்லை, அப்போது வீட்டில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி தலையில் போட்டுள்ளார்.

 நேரத்தில்  வந்தவர்கள் காயமடைந்த காளிமுத்துவை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையிலிருந்த அவர்  சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திய கணவன் கருப்பண்ணனை பிடிக்க அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகிறார்.