Asianet News TamilAsianet News Tamil

போதையில் தம்பியை சுட்டு கொன்ற விஜய் மக்கள் மன்றத் தலைவர்! அதிகாலையில் நடந்த அதிரவைக்கும் சம்பவம்...

சொத்துப் பிரச்சனைக்காக நடந்த தகராறில், சரக்கு போதையில் தனது உடன் பிறந்த தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தலைமறைவாகியுள்ளார் விஜய் மக்கள் மன்றத் தலைவர்.

vijay fan club chairman billa jegan killed his brother
Author
Tuticorin, First Published Apr 23, 2019, 10:01 AM IST

சொத்துப் பிரச்சனைக்காக நடந்த தகராறில், சரக்கு போதையில் தனது உடன் பிறந்த தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தலைமறைவாகியுள்ளார் விஜய் மக்கள் மன்றத் தலைவர்.

தூத்துக்குடி சின்னக்கடைத் தெருவை சேர்ந்தவர் பில்லா ஜெகன். இவர் விஜய் மக்கள் மன்றத் தலைவராக இருந்து வருகின்றார்.  இவர் விபத்தில் இறந்த கிளிவிங்சன், சுமன் மற்றும் சிம்சன் உள்ளிட்ட சகோதரர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஈஸ்டர் பண்டிகையின் பொழுது பில்லா ஜெகனுடன்,  சகோதரர்கள் சுமன் மற்றும் கொலையுண்ட சிம்சன் ஆகியோர் சொத்துக்கள் கேட்டு தகராறு செய்துள்ளனர். அன்றைய தினத்தில் பில்லா ஜெகனின் தாயார் புளியம்பட்டி கோவிலுக்கும்,  சிம்சனின் மனைவி பிரணிதா மணப்பாடு கோவிலுக்கும் வழிபாட்டிற்காக சென்றுள்ளனர்.

இந்நிலையில், பில்லா ஜெகன் தனக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேச தன்னுடைய நண்பன் தம் மணிகண்டனையும், தம்பி சிம்சன் தன்னுடைய ஆதரவிற்காக  மாரீஸ் மற்றும் நாராயணனையும் அழைக்க மீண்டும் சொத்துப் பிரிவினைக்காக பேச்சு வார்த்தை பில்லா ஜெகனின் வீட்டின் மாடியில் நேற்று இரவு தொடங்கி அதிகாலைவரை நீடித்தது. 

சரக்கு போதையில் இருந்த இரண்டு கேங்கும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. அப்போது திடீரென ஒரு தரப்பிலிருந்து எடைக்கு முடக்காக பேசியிருக்கிறார்கள் அப்போது வார்த்தைகள் தடித்துள்ளதாகவும், அப்பொழுது அண்ணன் பில்லா ஜெகன் தன்னிடமிருந்த  துப்பாக்கியினைக் கொண்டு சிம்சனை சுட்டிருக்கின்றார்.

அது சிம்சனின் தொடையில் பாய்ந்து அதிகளவு ரத்தத்தினை வெளிப்படுத்த, பஞ்சாயத்து பேச வந்த நண்பர்கள் சிம்சனை தூக்கிக் கொண்டு  மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். ரத்தம் அதிகளவில் வெளியேறிவிட்டதால் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தம்பி இறந்துவிட்ட தகவல் தெரிந்த  பில்லா ஜெகன் தலைமறைவாகியுள்ளார். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios