திருவாரூரில் விசிக பிரமுகர் வெட்டிப் படுகொலை; 7 பேர் கும்பல் வெறிச்செயல்

திருவாரூர் மாவட்டத்தில் கொடியேற்றுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Viduthalai Chiruthaigal Katchi party person killed by 7 members of gang in thiruvarur district

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அருகே உள்ள அக்கரை  நடுத்தெருவை சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் கவியரசன் (வயது 22). இவர் திருவாரூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். மேலும் விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளராகவும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அம்மையப்பன் அருகிலுள்ள திருக்கண்ணமங்கையில் ஒரு இறுதி சடங்கிற்கு சென்று விட்டு கவியரசன் வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் ஏழு பேர் கொண்ட கும்பல் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்து கவியரசனை வழி மறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் நிலைக்குலைந்து அருகில் உள்ள வயல்வெளியில் இறங்கி ஓடிய கவியரசனை விரட்டிச் சென்று கழுத்தில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் கவியரசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மாநகரப் பேருந்துகளை ஓட்டுநரை தவிர வேறு யாரும் கட்டாயம் இயக்கக் கூடாது.. போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை

இதனையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக குடவாசல் காவல் துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் குடவாசல் காவல் துறையினர், அதிவிரைவுப் படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். அக்கம் பக்க கிராம மக்களும் அந்த இடத்தில் பெருமளவு திரண்டனர். அதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கொலை நடந்த இடத்திற்கு நேரில் வந்து  பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்த  காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

கவியரசன் விடுதலை சிறுத்தை கட்சியில் இருப்பதால் சமீபத்தில் அவரது ஊரில் பாஜக சார்பில் கொடியேற்றப்பட்டதாகவும் அதற்கு இவர் செல்லவில்லை என்பதால் இவர் உள்ளிட்ட மூன்று பேரை அம்மையப்பன் கடைத்தெருவில் வைத்து ஒரு கும்பல் அடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக புகாரளிக்கப்பட்டது. விவகாரத்தில் தொடர்புடைய மற்ற இருவர் வழக்கை வாபஸ் பெற்ற நிலையில் கவியரசன் மட்டும் வழக்கை திரும்ப பெறாததால் இந்த படுகொலை நடந்திருக்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

“கள ஆய்வில் முதலமைச்சர்” புதிய திட்டத்தை தொடங்கிவைக்க ரயிலில் பயணம் செய்யும் மு.க.ஸ்டாலின்..! ஏன் தெரியுமா.?

தொடர்ந்து இந்த கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கவியரசன் உடலை கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் இளைஞர் வயல் வெளியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios