மாநகரப் பேருந்துகளை ஓட்டுநரை தவிர வேறு யாரும் கட்டாயம் இயக்கக் கூடாது.. போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை
நமது மாநகர போக்குவரத்துக் கழக கிளைகளில் ஒரு சில நடத்துநர்கள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்குவதாக தெரிய வருகிறது.
மாநகரப் பேருந்துகளை ஓட்டுநரை தவிர வேறு யாரும் கட்டாயம் இயக்கக் கூடாது என போக்குவரத்துத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்;- நமது மாநகர போக்குவரத்துக் கழக கிளைகளில் ஒரு சில நடத்துநர்கள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்குவதாக தெரிய வருகிறது.
மத்திய பணிமனையில் 28.01.2023 அன்று நடத்துநர், ஓட்டுநருக்கு பதிலாக பேருந்தினை எடுத்து டீஸல் பங்கினை இடித்து சேதமேற்படுத்தியுள்ளது இதனை உறுதி செய்கிறது. எந்த சூழ்நிலையிலும் ஓட்டுநரை தவிர மற்றவர்கள் பேருந்தினை பணிமனை உள்ளே மற்றும் வெளியே கண்டிப்பாக இயக்க கூடாது.
கிளைமேலாளர்கள் மற்றும் பணியிலுள்ள மேற்பார்வையாளர்கள் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படா வண்ணம் கண்காணிக்க வேண்டும். கிளைமேலாளர்கள் உரிய தகவலை ஓட்டுநர், நடத்துநர் மற்றும் அனைவரும் அறியும் வண்ணம் தகவல் பலகையில் ஒட்டவும், தொடர் முயற்சியாக பயிற்சி பள்ளிக்கு வரும் அனைவருக்கும் தெரியப்படுத்த இச்சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.