வாடகைக்கு குடியிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரை, காலி செய்யச் சொன்ன வீட்டின் ஒன்றரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் சேகர். இவர் தனக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளராக இருந்த தனது நண்பர் புல்லட் மோகன் என்பவரை கடை வைத்துக் கொள்ள வாடகைக்கு கொடுத்துள்ளார்.

இவர்கள் அந்த பகுதியில் மணல் கடத்தல், மணல் வண்டிக்கு மாமூல் வசூல் செய்தல் என இருவரும் ஒன்றாக சேர்ந்து பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், வேலூர் நடந்த தேர்தலில் இருவரும் சேர்ந்து ஒன்றாக தேர்தல் வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக மோகன் வாடகை சரியாக கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் வீட்டுடன் கூடிய கடையை காலி செய்ய சொல்லியுள்ளார் சேகர், அவர் காலி செய்ய மறுத்து மிரட்டல் விடுத்துள்ளார்

இந்நிலையில், பணம் கொடுக்கல் வாங்கலிலும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புல்லட் மோகனை தீர்த்துக்கட்ட சேகர் கொலையையே தொழிலாக செய்யும் கும்பலுடன் பேசி திட்டமிட்டதாகக் சொல்லப்படுகிறது. இதையடுத்து உஷாரான புல்லட் மோகன், நேற்று காலையில் சேகரை வெறித்தனமாக வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவானார்.

இதனையடுத்து புல்லட் மோகன் தனது வக்கீல் உதவியுடன், ஆரணி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.  விசிக பிரமுகரான இந்த ரவுடி புல்லட் மோகன் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.