கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த பெண் பலாத்காரம் செய்து நிர்வாண நிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த பெண் பலாத்காரம் செய்து நிர்வாண நிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் அருகே உள்ள உமர் நகரைச் சேர்ந்தவர் ஷாகிதா(40). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்துவிட்டார். இதனால், அவர் தனது 18 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் வாணியம்பாடி பகுதியில் ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார். 

நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாகிவிட்டதால் அவரது மகள் வேலைக்கு சென்ற வீட்டிலேயே தங்கிவிட்டாராம். நேற்று காலை மகள் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது, தாய் ஷாகிதா நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தது. ஷாகிதா அணிந்திருந்த ஆடை உட்பட வீட்டில் இருந்த ஆடைகள் அனைத்தும் வெளியே வீசப்பட்டிருந்தது. 

இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷாகிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷாகிதாவை யாராவது பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.