அக்கறையா இன்சூரன்ஸ் போட்டது இதுக்கு தானா? ரூ.25 லட்சத்திற்காக மனைவியை கொன்ற கணவன்
உத்தரகாண்ட் மாநிலத்தில் காப்பாட்டு பணத்தை பெறுவதற்காக பாம்பின் விஷத்தை மனைவியின் உடலில் செலுத்தில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், ஜாஸ்பூர் உதய்சிங் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுபம் சௌத்ரி, சலோனி தம்பதி. இவர்கள் இருவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே சுபம் சௌத்ரிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சலோனி கணவரிடம் இருந்து முறைப்படி விவாகரத்து பெற்று தனியாக வாழலாம் என்று முடிவு செய்துள்ளார்.
கணவனை கொலைகாரனாக்கிய ரீல்ஸ் சம்பவம்; கர்நாடகாவில் பரபரப்பு
மேலும் இது தொடர்பாக தனது பெற்றோர் மற்றும் சகோதரரிடம் தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க சுபம் கடந்த மாதம் சலோனியின் பெயரில் ரூ.25 லட்சம் மதிப்பில் காப்பீடு தொடங்கி உள்ளார். இதற்காக ரூ.2 லட்சம் சந்தா தொகையும் கட்டியுள்ளார். இந்த நிலையில் சலோனி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். சலோனியின் மரணத்திற்கு சுபம் தான் காரணம் என்று அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த அரசியல் பிரமுகர்; அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்
புகாரின் அடிப்படையில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் உயிரிழந்த பெண்ணின் உடலில் பாம்பின் விஷம் கலந்திருப்பதாகவும், அனால் உடலில் பாம்பு கடித்ததற்கான அடையாளங்கள் இல்லாததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் கணவனிடம் மேற்கொண்ட விசாரணையில் பாம்பின் விஷத்தை ஊசி மூலம் மனைவியின் உடலில் செலுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காப்பாடு பணத்திற்காக மனைவியை கணவனே நூதன முறையில் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.