கர்நாடகாவில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோவுக்கு அடிமையாகி இருந்து மனைவியை கணவனே வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம், உடுப்பி பிரம்மவர்சாலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிரண் உபாத்யா (வயது 30), ஜெய ஸ்ரீ (28) தம்பதி. இவர்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஜெய ஸ்ரீ கடந்த சில மாதங்களாக அதிகமாக செல்போன் பயன்படுத்துவது, ரீல்ஸ் வீடியோ எடுத்து மகிழ்வது என அதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அவ்வபோது மோதல் ஏற்பட்டுள்ளது.

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த அரசியல் பிரமுகர்; அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

அந்த வகையில் நேற்றும் ஜெய ஸ்ரீ ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததால் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கிரண் ஜெய ஸ்ரீயை அரிவாளால் கடுமையாக தாக்கி உள்ளார். தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜெய ஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உங்கள் குடும்ப பட்ஜெட்டில் குறையும் மருத்துவ செலவு

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கோட்டா காவல் துறையினர் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கிரணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனே மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.