கரூர் வையாபுரி நகரில் நியாஸ் அலி என்னும் வாலிபர் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் தனது செல்போனில் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பிறருக்கு பரப்பி வந்துள்ளார். முகநூலிலும் பதிவிட்டிருக்கிறார். 

ஆபாச படம் பார்ப்பவர்கள் உலகவில் இந்தியாவில் தான் அதிகமானோர் இருப்பதாக சமீபத்தில் ஆய்வு ஒன்று வெளியாகியது. அதிலும் தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படத்தை பலர் பார்ப்பதாக அதிர்ச்சி தகவல் வந்தது. இதனையடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி ஆபாச படத்தை பரப்புபவர்களை காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தநிலையில் தற்போது கரூரில் வடமாநில வாலிபர் ஒருவர் சிறார் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் வையாபுரி நகரில் நியாஸ் அலி என்னும் வாலிபர் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் தனது செல்போனில் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பிறருக்கு பரப்பி வந்துள்ளார். முகநூலிலும் பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நியாஸ் அலியை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்து பரப்புவது தொடர்பான வழக்கில் முதலில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படங்களை இவர் பரப்பியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன்பிறகு சென்னையை சேர்ந்த 72 வயதான மோகன் என்னும் முதியவர் கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச படத்தை அனுப்பி சிக்கினார். கோவையில் இரண்டு பேர் கைதாகினர். பின் சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சுமித்குமார் கல்ரா என்கிற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து திருச்சியில் ஆபாச படங்களை தரவிறக்கம் செய்து பரப்பியதாக காதர்பாட்சா, ஷேக் அப்துல்லா என இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஹரிஷ் என்கிற பி.எஸ்.சி பட்டதாரி கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் தற்போது கரூரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: கஞ்சாவுக்கு அடிமையான கடைசி மகன்..! ஆத்திரத்தின் உச்சியில் கொடூரமாக கொன்ற தாய்..!