செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு நாகராஜ், புகழேந்தி என இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றினர். 50 வயதை கடந்த இருவரும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகளுக்கு பாடம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் இவர்கள் இருவரும் தங்களிடம் பயிலும் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து செங்கல்பட்டு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி கடந்த 2018 ம் ஆண்டு இரண்டு ஆசிரியர்களையும் விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒரு மாணவியின் பெற்றோர் மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அங்கு இரு ஆசிரியர்களும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது நிரூபணம் ஆனது.

நள்ளிரவில் பயங்கரம்..! லாரி ஓட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை..!

இதன்காரணமாக செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்த விடுதலை உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இருவரும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில் நாகராஜிற்கு 5 ஆண்டுகளும், புகழேந்திக்கு 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருவருக்கும் தலா 24 ஆயிரம் மற்றும் 4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் நாகராஜ் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.