கொடுத்த காசை திருப்பி கேட்டதால் கூலிப்படையை வைத்து போட்டு தள்ளினேன்.. டெய்லர் கொலை வழக்கில் பகீர் தகவல்..!

கடந்த 7ம் தேதி இரவு வழக்கம்போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்தனர். 

tiruvannamalai Taylor murder case.. Shocking confession of the arrested

திருவண்ணாமலையில் கடனை திருப்பிக்கேட்டதால் டெய்லர் வெட்டி கொலை செய்யப்பட்டதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தை அடுத்த அடுத்த நல்லவன்பாளையம் சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்  ஆறுமுகம்(52). திருவண்ணாமலை திருவூடல் தெருவில் டெய்லர் கடை நடத்தி வந்தார். கடந்த 7ம் தேதி இரவு வழக்கம்போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்தனர்.

இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்! அரைகுறை ஆடைகளில் 2 இளம்பெண்கள்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா?

tiruvannamalai Taylor murder case.. Shocking confession of the arrested

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளின் அடிப்படையில் கொலையாளிகளை அடையாளம் காணப்பட்டனர். இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக கார் டிரைவர் பரந்தாமன்(38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. 

இதையும் படிங்க;- மைத்துனியை மடக்க நினைத்த தங்கையின் கணவர்.. உல்லாசத்துக்கு வர மறுத்ததால் நடுரோட்டிலே கதறவிட்ட சம்பவம்..!

tiruvannamalai Taylor murder case.. Shocking confession of the arrested

டெய்லர் ஆறுமுகத்திடம் கடந்த 2016ம் ஆண்டு ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியதாகவும், அதை திருப்பி கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்ததால் கூலிப்படை ஏவி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். கார் டிரைவர் பரந்தாமன் கொடுத்த தகவலின் அடிப்படையில், கூலிப்படையாக செயல்பட்ட  கார் டிரைவர் பாரதி(21), கல்லூரி மாணவர் தமிழரசன்(20), ஸ்ரீகாந்த்(20) உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios