Asianet News TamilAsianet News Tamil

சொத்துக்காக 3 பேரை உயிருடன் எரித்து கொன்ற வழக்கு.. கணவன், மனைவிக்கு 4 தூக்குதண்டனை.. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன் - மனைவிக்கு தலா 4 தூக்கு தண்டனையும், 2 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

Tindivanam murder case... Husband, wife 4 sentenced..Court judgment
Author
Chennai, First Published Oct 26, 2021, 7:58 PM IST

திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன் - மனைவிக்கு தலா 4 தூக்கு தண்டனையும், 2 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கடந்த 2019ம் ஆண்டு  மே 17ம் தேதி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராய பிள்ளை தெருவைச் சேர்ந்த ராஜ், அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் இளைய மகன் கெளதம் ஆகியோர் வீட்டின் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணி அளவில் அந்த அறையில் தீப்பிடித்து எரிந்து மூன்று பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். 

Tindivanam murder case... Husband, wife 4 sentenced..Court judgment

இதையும் படிங்க;- ஏசி மின் கசிவில் 3 பேர் உயிரிழந்தது திட்டமிட்ட கொலை...! வெளியானது அதிர்ச்சி தகவல்..!

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஏசி மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தே உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்பட்டது. இதனையடுத்து, இவர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் கொலை செய்து விட்டு நாடகமாடிய மகன் கோவர்த்தனன், அவரது மனைவி தீப காயத்ரி ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 

Tindivanam murder case... Husband, wife 4 sentenced..Court judgment

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வேல்முருகன் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும்  4 தூக்கு தண்டனை, தலா 2 ஆயுள் தண்டனை, தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios