சினிமா மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்! 3 பெண்களை ஏமாற்றி திருமணம்! கல்யாண மன்னன் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்.!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி சின்ன லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சப்பா மகன் கார்த்திக் (23). வேன் ஓட்டுநர். கடந்த 2 ஆண்டுகளுக்கு உத்தனப்பள்ளியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
சூளகிரி அருகே பெண்களை ஏமாற்றி அடுத்தடுத்து 3 திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி சின்ன லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சப்பா மகன் கார்த்திக் (23). வேன் ஓட்டுநர். கடந்த 2 ஆண்டுகளுக்கு உத்தனப்பள்ளியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 6 மாதத்தில் குழந்தை உள்ளது. இந்நிலையில், முதல் மனைவிக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணை கடந்த ஆண்டு கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். அவரை வேறு ஒரு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடி வைத்துள்ளார். ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
இதையும் படிங்க;- நிர்வாண வீடியோ கால்.. இது மாதிரி பெண்கள் தான் குறி.. யோகேஷ் குறித்து வெளியான பகீர் தகவல்..!
இதையடுத்து, சமீபத்தில் விவசாய வேலைக்கு செல்லும் பெண்ணை கோயிலில் தாலி கட்டி 3வதாக திருமணம் செய்து கொண்டு அவரையும் தனியே வேறொரு பகுதியில் ஒரு வீட்டில் குடிவைத்துள்ளார். பல நாட்களாக 3 பேருடனும் மாறி மாறி குடும்பம் நடத்தி வந்தார்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலியை குத்தி கொலை செய்து விட்டு தொழிலாளி என்ன செய்தார் தெரியுமா? பகீர் சம்பவம்..!
இந்நிலையில், கார்த்திக்கின் லீலைகள் அவரது உறவினர்கள் மூலமாக 3 பெண்களுக்கும் தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, பாதிக்கபட்ட 3 பேரும் தங்களது பெற்றோருடன் உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காத்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.