நிர்வாண வீடியோ கால்.. இது மாதிரி பெண்கள் தான் குறி.. யோகேஷ் குறித்து வெளியான பகீர் தகவல்..!
டெலிகிராம் மூலம் பழகி கல்லூரி பெண்ணை நிர்வாணமாக வீடியோ காலில் பேச வைத்து பணம் பறிக்க முயற்சித்த இளைஞர் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அரசுத் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதற்காக டெலிகிராம் செயலியில் போட்டித்தேர்வு தொடர்பான ஒரு குழு ஒன்றில் இணைந்துள்ளார். அந்த குழுவில் இருந்த நபர் தாம் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி அப்பெண்ணிடம் பழகி வந்துள்ளார். அந்த கல்லூரி மாணவிக்கு தனிப்பட்ட முறையில் சாட்டிங் செய்து வந்துள்ளார்.
porn video 2
பின்னர் பெண்ணின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்துள்ளார். அதை புகைப்படத்தை வைத்து கொண்டு அந்த நபர் தன்னுடன் வீடியோ காலில் நிர்வாணமாக பேச வேண்டும் என்றும் இல்லை என்றால் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன இளம்பெண் இளைஞருடன் வீடியோ காலில் நிர்வாணமாகப் பேசியுள்ளார்.
ஆனால், இதை அந்த இளைஞர் வீடியோவாக பதிவு செய்து வைத்து கொண்டு மீண்டும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து, பெண் டெலிகிராம் செயலியில் இருந்து வெளியேறினார். இதனால் கடுப்பான இளைஞர் அந்த வீடியோவை பெண்ணின் சகோதரருக்கு அனுப்பினார். வீடியோக்களை கண்டு பெண்ணின் சகோதரர் அதிர்ச்சி அடைந்தார். அந்த இளைஞர் வீடியோக்களை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பெண்ணிடம் சகோதரர் விசாரித்த போது கதறிய படி நடந்த உண்மைகளை கூறியுள்ளார். பின்னர், பாதிக்கப்பட்ட பெண் தேனி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து விசாரணை நடத்தியதில் மிரட்டிய அந்த இளைஞர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ் குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து யோகேஷ்குமாரை கைது செய்து தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.