கள்ளக்காதலியை குத்தி கொலை செய்து விட்டு தொழிலாளி என்ன செய்தார் தெரியுமா? பகீர் சம்பவம்..!

சேலம் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (45). இவரது மனைவி அமுதா (40). இவர்களுக்கு 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அமுதா கடைசி மகனுடன் வசித்து வந்தார். 

illegal love... Women murder in salem

கள்ளக்காதலியை குத்தி கொலை செய்துவிட்டு வெள்ளிப்பட்டறை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (45). இவரது மனைவி அமுதா (40). இவர்களுக்கு 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அமுதா கடைசி மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில்,  வெள்ளி பட்டறை தொழிலாளி தங்கராஜ் (35) என்பவருடன் அமுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், அமுதாவின் மகன் பிரகாஷ் இரவு வேலைக்கு சென்றுவிட்டதால் தங்கராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போதுது இருவரும் வீட்டில் ஒன்றாக தங்கியுள்ளனர். இரவு வேலைக்கு சென்றுவிட்டு காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு உட்புறமாக பூட்டி இருந்ததால் வெகுநேரமாக தட்டியுள்ளார்.  கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். 

 அப்போது அமுதா ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்தார். மேலும் அவரது அருகில் தங்கராஜூம் வாயில் நுரை தள்ளியபடி சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில்  அமுதாவை கொன்று தங்கராஜ் தற்கொலை செய்தது தெரியவந்தது. 

அமுதாவை கத்தியால் குத்தி கொன்று விட்டு தங்கராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தங்கராஜ் அமுதாவுக்கு அதிக அளவில் பணத்தை செலவு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன வேதனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலில் அமுதாவை கொன்று தங்கராஜ் தற்கொலை செய்தது தெரியவந்தது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios