Asianet News TamilAsianet News Tamil

ரூ.300 கோடி மோசடி: கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது!

ரூ.300 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்

Three people from the same family arrested in Coimbatore for Rs.300 crore fraud smp
Author
First Published Apr 17, 2024, 3:46 PM IST

தொழில் அதிபருக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் பணத்தை மோசடி செய்த மூன்று பேரை கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 8 பேர் சிவராஜிற்கு சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயார் செய்தும், 100 கோடி ரூபாய் பணத்தையும் மோசடி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

மோசடி செய்ததை அறிந்த சிவராஜ் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வசந்த் மற்றும் சிவகுமார் ஆகிய இருவரை ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

ரூ.1 கோடி மதிப்புள்ள லம்போர்கினி காரை தீ வைத்து எரித்த நபர்: இதுதான் காரணம்?

இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அஸ்வின்குமார் உள்ளிட்ட 2 பேர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது மனைவி ஷீலா, மகள் தீக்ஷா, மருமகன் சக்தி சுந்தர் ஆகிய மூவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

Three people from the same family arrested in Coimbatore for Rs.300 crore fraud smp

தொடர்ந்து அவர்களை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் தொழிலதிபருக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் சொத்துக்களை அபகரித்துள்ளதாக குற்றம் சாட்டப்படும் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios