ஒரு நாள் செல்போனில் பேசிக் கொண்டு இருக்கும் போது தனது ஆசைப்படி நடந்து கொள்ள வேண்டும் என சுஜித் கேட்டுக் கொண்டார். அவரது விருப்பப்படியெல்லாம் செல்போன் வீடியோ காலில் மாணவி நடந்து கொண்டார். இதையடுத்து அவரை ஆபாசமாக படம் எடுத்து வீடியோ பதிவு செய்து கொண்ட சுஜித்.

குமரியில் செல்போனில் கல்லூரி மாணவியை ஆபாச படமெடுத்து மிரட்டி பலாத்காரம் செய்ததுடன், நண்பர்களுக்கும் விருந்தாக்க முயற்சித்த ராணுவ வீரரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குமரி மாவட்டம் அருமனை அருகே 19 வயது இளம்பெண், பிரபல கல்லூரியில் பி.காம். 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஏலச்சீட்டும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் சீட்டு எடுத்தவர்கள் பணம் கட்டாததால் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சீட்டு பணம் அடைக்க ரூ.50 ஆயிரம் வரை அவசரமாக தேவைப்பட்டது. தோழிகள் நண்பர்களிடம் கேட்டும் கிடைக்கவில்லை.

அப்போது கல்லூரி நண்பர் ஒருவரின் உறவினரான அருமனையை சேர்ந்த ராணுவ வீரர் சுஜித் (30) என்பவர், மாணவிக்கு அறிமுகம் ஆனார். அவர் நான் பணம் தந்து உதவுகிறேன் என கூறி மாணவியுடன் பழகி வந்துள்ளார். அடிக்கடி செல்போனில் பேசியதில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. திருமணம் செய்து கொள்வேன் என்றும் ஆசை வார்த்தைகள் கூறிவந்துள்ளார். 

இந்நிலையில், ஒரு நாள் செல்போனில் பேசிக் கொண்டு இருக்கும் போது தனது ஆசைப்படி நடந்து கொள்ள வேண்டும் என சுஜித் கேட்டுக் கொண்டார். அவரது விருப்பப்படியெல்லாம் செல்போன் வீடியோ காலில் மாணவி நடந்து கொண்டார். இதையடுத்து அவரை ஆபாசமாக படம் எடுத்து வீடியோ பதிவு செய்து கொண்ட சுஜித், இதை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என கூறி தனிமையில் அழைத்து பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் அந்த வாலிபர் மாணவியின் ஆபாச படங்களை நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். அவர்களும் மாணவியை தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படி மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மாணவி இது பற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவி கொடுத்த புகாரின் பேரில் சுஜித் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.