Asianet News TamilAsianet News Tamil

வேலையைத் தொடங்கியது திஹார் சிறை நிர்வாகம்: நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு....

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட 4 பேருக்கும் திஹார் சிறையில் விரைவி்ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 
 

thihar jain is ready to hang nirbaya criminals
Author
Delhi, First Published Dec 13, 2019, 9:18 AM IST

தூக்கிலிடும் பணி செய்யும் இரண்டு ஹேங்மேன்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு திஹார் சிறை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, 23-வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார்.

thihar jain is ready to hang nirbaya criminals

 அவரின் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டு பலன் அளிக்காமல் 2012-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.
டெல்லி போலீஸார் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்குர் மற்றும் ஒரு இளம் குற்றவாளி என 6 பேரைக் கைது செய்தனர்.

இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். ‘நிர்பயா’ வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. 

thihar jain is ready to hang nirbaya criminals

இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.ஆனால், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகள் அக்சய் குமார் சிங் தற்போது உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். வெவ்வேறு சிறையில் இருந்த 4 பேரும் சமீபத்தில் திஹார் சிறைக்கு திடீரென மாற்றப்பட்டனர்.

இதனால் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் தூக்கிலிடும் பணி செய்யும் ஹேங்மேன்’ பணியில் திஹார் சிறையில் யாரும் இல்லாததால் இரண்டு பேரை உடனடியாக அனுப்பி வைக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு திஹார் சிறை நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து உ.பி. சிறைத்துறை கூடுதல் இயக்குநர் ஆனந்த் குமார் கூறுகையில் ‘‘ஹேங்மேன்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு திஹார் சிறை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இரண்டுபேரில ஒருவர் மீரட்டிலும், மற்றொருவர் லக்னோவிலும் தற்போது பணியில் உள்ளார். அவர்களை அனுப்பி வைக்க தயாராக இருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios