சக்திவேல் திடீரென உயிரிழந்ததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் முத்துசாமி கொளத்தூர் காவல் நிலையத்தில் தனது அண்ணன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறி புகார் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காரைக்காடு கிராமத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை விஷம் வைத்து கொலை செய்த மனைவி காவல்துறையிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த காரைக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் 37, இவருக்கு புகழரசி 27 என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் 37 வயதான சக்திவேல் திடீரென உயிரிழந்ததால் அவரது சகோதரர் முத்துசாமி சந்தேகம் அடைந்துள்ளார்.

இதனால், கொளத்தூர் காவல் நிலையத்தில் தனது அண்ணன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறி புகார் அளித்துள்ளார். முத்துசாமியின் புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கொளத்தூர் போலீசார் மர்மமான முறையில் உயிரிழந்த சக்திவேலின் பிரேதத்தை மீட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து சக்திவேலின் மனைவி புகழரசிக்கும், முத்துக்குமார் 29 என்ற இளைஞருக்கு தகாத உறவு இருந்ததாக கூறப்பட்டது.
இதையும் படிங்க : அண்ணாமலை பொதுவெளியில் பேச கூடாது.. ஐஜிக்கு பறந்த புகார் - விரைவில் கைதாகிறாரா அண்ணாமலை ?
போலீசாருக்கு இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் சந்தேகமடைந்த கொளத்தூர் போலீஸார் சக்திவேலின் மனைவி புகழரசி மற்றும் முத்துக்குமாரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது போலீசார் விசாரணையில் சக்திவேலின் மனைவி புகழரசி அளித்த வாக்குமூலத்தில் தனக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து பலமுறை சக்திவேல் தன்னை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் தொடர்ந்து தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை புகழரசியும் அவரது கள்ளக் காதலனான முத்துக்குமாரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு நேற்று இரவு வீட்டுக்கு வந்த சக்திவேலுக்கு தண்ணீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவரை மயக்கமடையச் செய்து உள்ளார் புகழரசி, அதனைத் தொடர்ந்து விஷம் கலந்து பாலை கொடுத்துள்ளார். இருந்தபோதிலும் சக்திவேல் உயிர் பிழைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று பயந்து போன புகழரசி மீண்டும் விஷம் கலந்த உணவை சக்திவேலுக்கு மயக்க நிலையிலேயே கொடுத்து கொன்றதாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?
