மாமியார் வீட்டுக்கு போன மனைவி.. திரும்ப வராததால் அந்தரங்க உறுப்பை அறுத்துக்கொண்ட கணவன் - அதிர்ச்சி சம்பவம்
தனது மனைவியுடன் குடும்ப சண்டையால் கணவர் தன் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் மனைவி சண்டை போடுவது சகஜம் தான். தம்பதிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டால், சிலர் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
ஆனால் இங்கு ஒருவர் தனது மனைவி மாமியார் வீட்டில் இருந்து வராததால் அவரது அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் உள்ள மாதேபூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!
கிருஷ்ண பாசுகி என்பவர் அனிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்தை விட்டு விலகிய கிருஷ்ணா, பஞ்சாப் மாநிலம் மண்டியில் வேலை பார்த்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லை.
மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவிக்காகக் காத்திருந்ததால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா கூரிய கத்தியால் தனது அந்தரங்க உறுப்பை வெட்டினார். இதுபற்றி பேசிய கிருஷ்ணாவின் நண்பர், கடந்த ஜனவரி 20, 2023 அன்று, அவரது மனைவி தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, தனது அந்தரங்க உறுப்பை வெட்டினார்.
இதையும் படிங்க..Karnataka Elections 2023: தொகுதியை மாற்றிய சித்தராமையா.. பாஜக எடுத்த அஸ்திரம்! சூடுபிடித்த கர்நாடகா தேர்தல்
அக்கம் பக்கத்தினர் கிருஷ்ண பாசுகியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..அதிமுகவுக்கு ‘நோ’! ஈரோடு கிழக்கு தொகுதியில் மலரும் தாமரை! அண்ணாமலை வேட்பாளர்.? டெல்லி போடும் புது கணக்கு
இதையும் படிங்க..மனநலம் குன்றிய சிறுமி பாலியல் பலாத்காரம்! கொடுமை! வைரலான வீடியோ.. 3 சிறுவர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்