அதிமுகவுக்கு ‘நோ’! ஈரோடு கிழக்கு தொகுதியில் மலரும் தாமரை! அண்ணாமலை வேட்பாளர்.? டெல்லி போடும் புது கணக்கு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக, அதிமுக, காங்கிரஸ்,பாஜக ஆகிய கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறது. ஆனால் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது.
இப்போதும் அந்த கட்சியே போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக போட்டியிட விரும்புவதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் ஜி.கே.வாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு செய்தியாளர்களை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்று ஜி.கே வாசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!
இன்று அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு தரப்பும் தனித்தனியாக கூட்டணி கட்சியான பாஜகவிடம் ஆதரவு கேட்டதாக கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் சட்டப்பேரவை இடைத்தேர்தல் இதுவாகும். இதனால் திமுகவின் கூட்டணியாக காங்கிரஸ் கட்சி போட்டியிட்டாலும், இங்கு திமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஆளும் கட்சியான திமுகவின் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதற்காகவும், அதிமுகவின் தலைமை எடப்பாடி தான் என்று நிரூபிக்கவும் இந்த தேர்தலை சந்திக்க உள்ளார் எடப்பாடி பழனிசாமி என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடப்போகிறார்கள் என்ற தகவலை எந்த கட்சியும் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இல்லாமல், தனித்து நின்று போட்டியிடலாமா ? என்ற தமிழக பாஜக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, கடந்த வாரத்தில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார்.
இதையும் படிங்க..Karnataka Elections 2023: தொகுதியை மாற்றிய சித்தராமையா.. பாஜக எடுத்த அஸ்திரம்! சூடுபிடித்த கர்நாடகா தேர்தல்
அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சுமார் 1 மணி நேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.இதில் பல முக்கிய விஷயங்கள் பற்றி பேசப்பட்டது. குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல், அதிமுக - பாஜக கூட்டணி, இரட்டை இலை சின்னம் என பல முக்கியமான காரசார விவகாரங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது என்று கிசுகிசுக்கிறார்கள்.
இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசிய போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கா ? அல்லது ஓ.பன்னீர்செல்வமா ? என்பது பாஜகவின் முக்கிய அஸ்திரமாக பார்க்கப்படுகிறது. அதனால் பாஜக சொல்வதை அதிமுக கேட்கலாம். ஒருவேளை பாஜகவின் நிபந்தனைகளுக்கு அதிமுகவின் இரு அணிகள் ஒத்துவராத பட்சத்தில், அண்ணாமலை கூட போட்டியிடலாம் என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க..மனநலம் குன்றிய சிறுமி பாலியல் பலாத்காரம்! கொடுமை! வைரலான வீடியோ.. 3 சிறுவர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்