ஹோட்டலில் ரூம் போட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை உள்ளே புகுந்து செருப்பால் அடித்த கணவனின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 

ஆக்ராவில் தன் மனைவி வேறு ஒரு ஆணுடன் ஹோட்டல் அறைக்குள் இருப்பதை பார்த்த கணவர் செருப்பால் அந்த பெண்ணை கடுமையாக தாக்குகிறார். சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் அந்த வீடியோவில் கணவர் தன் மனைவி இருக்கும் ஹோட்டல் அறைக்கு செல்கிறார். அங்கு மனைவி வேறு ஒரு நபருடன் இருப்பதை பார்த்து ஆத்திரத்தில் செருப்பை கழற்றி மனைவியை விடாமல் தாக்குகிறார்.

 

அடிவாங்கிக்கொண்டே கீழாடையை அந்த மனைவி அணிகிறார். மீண்டும் தாக்கிய கணவரால் மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்கள், கணவரை தடுத்துள்ளனர். இது குறித்து ஆக்ரா போலீசார் கூறுகையில், “கொரோனா ஊரடங்கு வேளையில் ஹோட்டல் விடுதி போன்றவற்றில் அடையாள அட்டை இல்லாமல் தங்க தடை விதிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது. இருப்பினும் விதிமுறையை மீறி அந்த பெண்ணையும், ஆணையும் அனுமதித்துள்ளனர். இது குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என்றாலும் நாங்களாக விசாரணையை தொடர்ந்துள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.