தன்னுடன் பார்ட்னராக பணியாற்றும் திருமணமான பெண்ணை, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்துவந்த யூடியூப் சேனல் மேனேஜரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தன்னுடன் பார்ட்னராக பணியாற்றும் திருமணமான பெண்ணை, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்துவந்த யூடியூப் சேனல் மேனேஜரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத் ஜவஹர் நகரில்தான் இந்த வக்கிர சம்பவம் நடந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அவர்கள் பணி செய்யும் இடங்களில் அவர்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், அதனால் ஏற்படும் மன உளைச்சல்களுக்கு பெண்கள் ஆளாகும் அவலநிலை தொடர்கிறது. அந்த வரிசையில் தன்னுடன் பணியாற்றும் திருமணமான பெண்ணை, கணவரை விவாகரத்து செய்து விட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு யூடியூப் சேனல் மேலாளர் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஹைதராபாத் ஜவஹர் நகர் சந்தோஷ் காலனியைச் சேர்ந்தவர் அருண்குமார் தியாகி(47) உள்ளூரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் பங்குதாரராக இருந்த திருமணமான பெண்ணுடன் அவருக்கு ஒருதலை காதல் ஏற்பட்டது. இதையடுத்து கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அருண்குமார் அந்த பெண்ணை தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அந்தப் பெண், நாளைடைவில் அருண்குமாரின் நடவடிக்கைகளால் அச்சமடைந்தார். அதற்கிடையில் திடீரென ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்த அந்தப் பெண்ணின் கைகளை தனியறையில் கட்டிப்போட்ட தன்னை திருமணம் செய்துகொள் சம்மதிக்குமாறு அருண்குமார் கட்டாயப்படுத்தியது தான் அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.

பின்னர் ஒருவழியாக சமாளித்து அந்த நபரிடமிருந்து எப்படியோ தப்பித்து அந்த பெண் அதுகுறித்து ஜவஹர் நகர் போலீசில் கடந்த ஜூன் 26 தேதி புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் அருண்குமாரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.ஒரு சில மாதங்களில் ஜாமினில் வெளியே வந்த அருண்குமார் மீண்டும் அதே பெண்ணை பின்தொடர்ந்ததுடன் தனக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரை திரும்பப் பெற வேண்டும், கணவனை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் கொன்று விடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார். அதேபோல வேறு சில பெண்களிடமும் கைபேசியில் ஆபாசமான செய்திகளை அனுப்பி அவர்களுக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்ததாகவும் அவர் மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தனித்தனியாக இருவேறு வழக்குகளை பதிவு செய்த போலீசார் அருண் குமாரை மீண்டும் கைது செய்துள்ளனர்.