Asianet News TamilAsianet News Tamil

வரும்போதே பிணமாக வந்த ஸ்ரீமதி.. வேனை டிரைவரிடம் கொடுத்து ஒதுங்கிய ரவிக்குமார், மருத்துவமனை ரிப்போர்ட் பகீர்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது சடலமாகவே கொண்டுவரப்பட்டது தெரிய வந்துள்ளது. இதை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் உள்ள ஆவணங்கள் உறுதி செய்துள்ளது. 

The student died before reaching the hospital... the next shock
Author
Kallakurichi, First Published Aug 2, 2022, 1:28 PM IST

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது சடலமாகவே கொண்டுவரப்பட்டது தெரிய வந்துள்ளது. இதை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் உள்ள ஆவணங்கள் உறுதி செய்துள்ளது. பள்ளியிலிருந்து விழுந்து கிடந்த மாணவியை காப்பாற்றுவதற்காக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றோம் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ள.

நக்கீரன் ஊடகம் இதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் அவர் பள்ளிக்கூடத்தில் மேல்தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தால் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதை நிரூபிக்கும் வகையில் அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை, இதற்கிடையில் மாணவி தற்கொலை செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும், தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் மகள் இல்லவே இல்லை என்றும் தெரிவித்துள்ள மாணவியின் தாய், தன் மகளை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள் என அடித்து கூறிவருகிறார்.

The student died before reaching the hospital... the next shock

மகளின் மரணத்திற்கு நியாயம் வேண்டும், அதுவரை அப்பள்ளியை இழுத்து மூடவேண்டும் என்றும் அவர் கூறிவருகிறார். இதற்கிடையில் பொதுமக்கள் இளைஞர்கள் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன் அப்பள்ளியை தாக்கி வாகனங்களை தீக்கிரையாக்கினர், இது தொடர்பாக 300க்கும் மேற்பட்டோரே போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையில்  மாணவியின் உடலில் சந்தேகத்திற்கிடமான தடயங்கள் இருப்பதாக  முதல் உடற்கூறு ஆய்வறிக்கை தெரியவந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான அறிக்கைக்காகவும் பெற்றோர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: திருமணம் ஆகி நாலு மாசம் தான் ஆகுது! அதுக்குள்ள காதல் மனைவி கொலை! காட்டி கொடுத்த சிசிடிவி.. சென்னையில் பயங்கரம்

இதற்கிடையில் மாணவியின் மரணம் தொடர்பாக  பல்வேறு பகீர் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மாணவி மருத்துவமனையில் 3:30 மணிக்கு கொண்டுவரப்பட்டதாக மருத்துவமனை ஊழியர் ஒருவர் பேசி ஆடியோ சமீபத்தில் வெளியானது, இந்த ஆடியோவை நக்கீரன் ஊடகம் வெளியிட்டது. ஆனால் கள்ளக்குறிச்சி மருத்துவமனை ஆவணத்தில் மாணவிகள்  6.5am மணிக்கு  கொண்டுவரப்பட்டதாகவும், வரும்போதே சடலமாக கொண்டுவரப்பட்டதாக  பதிவாகியுள்ளது, இதனால் இந்த விவகாரத்தில் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளதால் இதில் பல உண்மைகள் மறைந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. 

The student died before reaching the hospital... the next shock

இதேபோல், மாணவி விழுந்த நிலையில் இருப்பதைக் கண்டு மாணவியை காப்பாற்றுவதற்காக உடனே பள்ளிக்கூடத்திலிருந்து ஆம்புலன்ஸ் வேனில் அவரை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றோம் எனவும், எப்படியாவது உயிரை காப்பாற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டதாகவும் ( இதனால்தான் பெற்றோர்க்கு தகவல் சொல்ல தாமதமானது) பள்ளி நிர்வாகம் கூறிவந்த நிலையில், மாணவி இறந்த நிலையில்தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக நக்கீரன் வெளியிட்டுள்ள ஆதரங்கள் உறுதி படுத்திகிறது. இதுதொடர்பாக களத்தில் ஆய்வு செய்துவரும் நக்கீரன் மூத்த செய்தியாளர் பிரகாஷ், இந்த தகவலை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்: பள்ளி மாணவர்களை குறி வைக்கும் போதை கும்பல்.! நூதன முறையில் கஞ்சா விற்பனை... அதிர்ச்சியில் போலீஸ்

இது இந்த வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரமாக கருதப்படுகிறது, இது குறித்து கள ஆய்வு செய்துவரும் செய்தியாளர் பிரகாஷ் கூறியிருப்பதாவது:-  மாணவி காலை 6. 5 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக ரெக்கார்டில் பதிவாகியுள்ளது, இதுகுறித்து ஸ்ரீமதியின் தாயாரிடம் கேட்டதற்கு, காலை 6.5 மணிக்கே எனது மகள் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் காலை 6.25 மணிக்கே என்னிடம் மகள் மருத்துவனைக்கு கொண்டு வந்த விவரத்தை தெரிவித்த தாக கூறியுள்ளார், கிட்டத்தட்ட அரை மணி நேரம் பொறுப்பற்ற முறையில் பள்ளி நிர்வாகம் செயல்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு ஸ்ரீமதியின் உடல் வருவதற்கு முன்பு அவரை சின்னசேலத்தில் இருக்கக்கூடிய தாலுகா மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

The student died before reaching the hospital... the next shock

ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்றும், இதனால் தங்களுக்கு பிரச்சினை வரும் என மருத்துவமனை ஊழியர்கள் மறுத்து விட்டனர், இதனால் அங்கிருந்து அவசர அவசரமாக கள்ளக்குறிச்சிக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது, சின்னசேலம் மருத்துவமனைக்கு ஸ்ரீமதி சென்றபோது அந்த வாகனத்தை ஓட்டியவர் தாளாளர் ரவிக்குமார், அதன் பிறகு மீண்டும் கனியாமூர் வந்து  பள்ளியில் இருந்த டிரைவரை கூப்பிட்டு  அந்த டிரைவர் மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு ஸ்ரீமதி கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஸ்ரீமதி மரணமடைந்தது ஏற்கனவே நடந்துவிட்டது என்பது இதன் மூலம் உறுதியாகிறது, அங்கு  நடந்த ஒரு சில சம்பவங்களால்  அவர் பிணம் ஆக்கப்பட்டார் என்ற கருத்து மேலோங்கி உள்ளது.  இவ்வாறு செய்தியாளர் பிரகாஷ் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios