Asianet News TamilAsianet News Tamil

ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்கமுடியாத 'நீ இருப்பதை விட சாவதே மேல்' கர்ப்பணி மனைவியை அடித்துக்கொன்ற கணவன்.!!

செங்கம் அருகே ஆண் குழந்தை பெற்றெடுக்க முடியாத நீ இருந்தாலென்ன இல்லாவிட்டால் என்ன என்று கூறி  எட்டுமாத கர்ப்பிணி மனைவியை கணவனே அடித்து தூக்கிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

The husband who beat his pregnant wife, who was unable to have a baby boy, 'is more likely to die than you are.'
Author
Tamilnadu, First Published Jul 11, 2020, 8:41 AM IST

செங்கம் அருகே ஆண் குழந்தை பெற்றெடுக்க முடியாத நீ இருந்தாலென்ன இல்லாவிட்டால் என்ன என்று கூறி  எட்டுமாத கர்ப்பிணி மனைவியை கணவனே அடித்து தூக்கிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம். செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் இவர் அதேபகுதியை சேர்ந்த செவிலியர் ஷோபனா என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர்களுக்கு அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக 4வதாக ஷோபனா கர்ப்பமாக்கியுள்ளார்.

The husband who beat his pregnant wife, who was unable to have a baby boy, 'is more likely to die than you are.'
    இந்த நிலையில், ஷோபனாவை மருத்துவ பரிசோதனைக்காக மணிகண்டன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஸ்கேன் எடுத்துப்பார்த்ததில் வயிற்றில் இருக்கும் குழந்தையும் பெண் குழந்தை என சட்டத்திற்கு புறம்பாக மணிகண்டன் கண்டுபிடித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்குள்ளும் பிரச்சனை வந்துள்ளது. மேலும் ஒரு ஆண் குழந்தையை கூட பெற்றெடுக்க முடியவில்லையா? எனக்கேட்டு ஷோபனாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி பணம் வாங்கி வரச் சொல்லியும் துன்புறுத்தியுள்ளார் மணிகண்டன். 

இந்நிலையில் ஷோபனாவின் தந்தை ஏழுமலைக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவரது மகள் வயிற்றுவலியால் அவதிப்படுவதாகவும், மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழுமலை மருத்துவமனைக்கு சென்றபோது ஏழுமலையை மருத்துவமனை காவலர் உள்ளேவிட மறுத்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஏழுமலை அவரது மனைவி மற்றும் உறவினர்களை அழைத்துக்கொண்டு மருத்துவமனையில் சென்று அவர்களது மகளை பார்க்க வேண்டுமென அனுமதிகேட்டுள்ளனர்.

The husband who beat his pregnant wife, who was unable to have a baby boy, 'is more likely to die than you are.'

அப்போது தலைமை மருத்துவர் அவர்களிடம், ஷோபனா வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். பின்னர் அவர்கள் ஷோபனாவின் உடலை பார்த்தப்பொழுது, கழுத்தில் கயிறு இருக்கப்பட்டதன் அடையாளம் இருந்துள்ளது. இதனால் ஷோபனா தானாக இறக்கவில்லை என்றும் மணிகண்டன் மற்றும் அவரின் பெற்றோரே தங்களது மகளை தூக்கிலிட்டு கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த கொலையை மறைக்க முயன்றதாக கூறி மருத்துவமனை முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உறுதியளித்த பின்னர் ஷோபனாவின் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பபட்டது.
 
Follow Us:
Download App:
  • android
  • ios