Asianet News TamilAsianet News Tamil

ஊர்மேய்ந்ததை தட்டிக் கேட்டதால் கொடூரம்: ஊறங்கிக் கொண்டிருந்த மனைவி, மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன்

கணவனின் கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை கணவன் உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானேவில்தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
 

The husband poured petrol on his wife and daughters and set them on fire after condemning the Illegal love
Author
First Published Oct 3, 2022, 4:33 PM IST

கணவனின் கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை கணவன் உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானேவில்தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, பெண்கள் வேலை செய்யும் இடங்கள், பொதுப் போக்குவரத்து என எல்லா இடங்களிலும் சீண்டலுக்கு ஆளாகின்றனர். இதுஒருபுறம் உள்ள நிலையில், பெரும்பாலான பெண்கள் குடும்ப வன்முறையில் சிக்கி சின்னாபின்னமாக்கி வருகின்றனர்.

The husband poured petrol on his wife and daughters and set them on fire after condemning the Illegal love

வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது, வரதட்சனை தராத மனைவிகள் அடித்து கொலை செய்யப்படுவது. குடித்துவிட்டு போதையில் கணவன்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது என எண்ணற்ற கொடூரங்களை பெண்கள் அனுபவித்து வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் கணவனால் வன்கொடுமை செய்யப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையும் படியுங்கள்: நல்லவனைபோல பேசி, பேஸ்புக் தோழியை கிளினிக் அழைத்த டாக்டர்.. ஆஸ்பத்திரி மெத்தையில் படுக்கவைத்து பலாத்காரம்..

இந்த வரிசையில் கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை கணவன் உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள டோம்பிவிலி பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (40) இவருக்கும் பிரீத்தி என்ற பெண்ணுக்கும் இடையே 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதையும் படியுங்கள்: என் அம்மாவின் கள்ளக்காதலன் என்னை நாசம் பண்ணிட்டான்.. ஃபர்ஸ்ட் நைட்டில் கணவனுக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்.!

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒரு மகளுக்கு 14 வயதும், மற்றொரு மகளுக்கு 11 வயது ஆகிறது. திருமணமான புதிதில் இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது, ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது, இந்நிலையில் கணவன் அதை பகுதியைச் சேர்ந்த வெறொரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தார். இதுதான் அவர்களின் பிரச்சனைக்கு காரணமாக இருந்தது  இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தனது கள்ளக்காதலுக்கு மனைவி தடையாக இருப்பதால் அவரையும் மகள்களையும்  தீர்த்துக்கட்ட கணவன் முடிவு செய்தார்.

The husband poured petrol on his wife and daughters and set them on fire after condemning the Illegal love

இதனையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை  மனைவி மற்றும் மகள்கள் உறங்கிக் கொண்டிருந்தனர் அப்போது அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி கணவன்  உயிருடன் தீ வைத்தார். இதில் மூவருக்கும் உடல் முழுக்க தீபரவி அலறி துடித்தனர். அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அனைத்தனர். 3 பேரும் கடுமையான தீக்காயம் அடைந்தனர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் தாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்தனர். 

அதற்குள் அக்கம் பக்கத்தினர் பிரீத்தி, மகள்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் மனைவி பிரீத்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகன்கள் இருவரும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் கணவன் பிரசாந்த் சாந்தாராம் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios