தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டம் கோடாட் நகரில் ஞாயிற்றுக்கிழமையான ஏப்ரல் 17 அன்று, மாலை ஆடைகள் களையப்பட்டு இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தார். 

அவரது தலை மற்றும் உடலில் காயங்கள் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியுற்ற அப்பகுதி மக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மயக்க நிலையில் இருந்த பெண்ணை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. பாதிக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை இரவு நடந்துவந்துள்ளார். 

அப்போது ஆட்டோவில் வந்த இருவர் பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பது போல் அழைத்துச் சென்று ஒரு ரூமில் அடைத்து வைத்துள்ளனர். பின்னர் அவருக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இருவரும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்தக் கொடுமை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் அங்கிருந்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவழியாக தப்பித்து வெளியே வந்து, அப்பகுதியில் மயக்க நிலையில் சுற்றிவந்துள்ளார். 

தற்போது அப்பெண் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் கவுன்சிலர் ஆவார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அவர் அப்பகுதியில் பணிப் பெண்ணாக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : தமிழகத்தை ஆளும் இரு சூரியன்கள்.. இது ஒரு தெய்வ செயல்.! தருமபுரம் ஆதீனம் அதிரடி பேச்சு !